சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நீங்க கேப்டனா இல்ல நீங்க தான் கேப்டனா.. விஜய் சேதுபதி மண்டகப்படி கொடுத்தும் திருந்தாத ரஞ்சித்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி பத்தாவது வாரத்தில் இருக்கிறது. கடந்த சில வாரங்களாகத் தான் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. அதேபோல் விஜய் சேதுபதியும் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

போன வாரம் கோவா அணியை அவர் போதும் போதும் என்ற அளவுக்கு தாளித்து எடுத்துவிட்டார். இதைத்தான் பார்வையாளர்களும் எதிர்பார்த்தனர்.

அதேபோல் இத்தனை வாரங்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் திறமையான நடிகராக இருக்கிறார் ரஞ்சித். அதை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள்.

உங்களிடமிருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன் என்று கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார். ஆனாலும் ரஞ்சித் தன்னுடைய அப்பாவி முகத்திரையிலிருந்து வெளியில் வரவில்லை.

இதில் இவர்தான் இந்த வார வீட்டின் தலைவர். இப்பவாவது அவருடைய ஒரிஜினல் குணம் வெளிவரும் என நாம் எதிர்பார்த்தோம்.

அதிகாரத்தை பயன்படுத்தாத ரஞ்சித்

ஆனால் இன்னும் அவர் அதே சேப் கேமை தான் ஆடி வருகிறார். அதிலும் ஹவுஸ் மேட்ஸ் அவரை ஒரு கேப்டனாக மதிக்கவே இல்லை.

இஷ்டத்திற்கு வாக்குவாதம் செய்வது அவரை கண்டுக்காதது என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அதேபோல் ரஞ்சித் ஒரு பிரச்சனையை நடந்தால் தன்னுடைய குரலை உயர்த்த வேண்டும்.

ஆனால் அவரோ கையெடுத்து கும்பிட்டு ஐயா சாமி என கெஞ்சுகிறார். இது பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த காரணத்தை சொல்லித்தான் தர்ஷிகா ஒரு முட்டையை உடைத்தார்.

அப்பவும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. ஆக மொத்தம் கையில் அதிகாரம் கிடைத்தும் ரஞ்சித் பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

இதை நிச்சயம் விஜய் சேதுபதி கேட்பார். ஏற்கனவே வாங்கியா மண்டகப்படி பத்தாது என இந்த வாரமும் நிறைய வாங்க போகிறார் கேப்டன்.

- Advertisement -

Trending News