Draupathi – Ranjith : மோகன்-ஜியின் திரௌபதி படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதாவது நாடக காதல் என்ற ஒரு கதைக்களத்தை வைத்து திரௌபதி படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் அடுத்த நாடக காதல் கதை அம்சத்தில் நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்திருக்கிறார்.
குழந்தை ℅ கவுண்டம்பாளையம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த ட்ரெய்லரில் பெண்களை கொச்சைப்படுத்தும் படியான சில வார்த்தைகள் இடம்பெற்று இருந்தது. அதாவது தன்னுடைய சாதி பெண்ணையே அசிங்கப்படுத்தும் படியாக வசனம் இடம்பெற்று இருக்கிறது.
இதற்கு மேலேயும் பெண் உன்னை அசிங்கப்படுத்த முடியுமா என்ற அளவுக்கு இந்த வசனம் இடம் பெற்றுள்ளதாக இப்போது சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அதாவது மாட்டுகறி தின்ன உடம்பு என்பதால் அதற்காகவே பெண்கள் ஆண்களின் காலடியில் கிடப்பார்கள் என்று அருவருக்கத்தக்க வசனம் இடம் பெற்று இருக்கிறது.
Also Read : எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்
மேலும் ஜாதி ரீதியான படமாக இருக்கும் என்பது தெள்ள தெளிவாக தெரிந்தது. ஆனால் ரஞ்சித் பேசுவதில் இது சாதி ரீதியான படம் அல்லாமல் சமூக நீதிக்கான படம் என்று கூறி இருக்கிறார். மேலும் இப்படத்தின் ட்ரெய்லரில் ரஞ்சித் ஒரு வசனம் பேசியிருந்தார். காதலிக்கும் போது ஜாதி தேவையில்லை, ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யும் போதும் ஜாதி தேவையில்லை, பெத்த அம்மா அப்பாவே தேவை இல்ல சமத்துவம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஞ்சித் இனி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய வேண்டும் என்றால் அப்பா, அம்மா கையெழுத்து அவசியம் என்ற சட்டம் வேண்டும் என்று க. இப்போது உள்ள காலகட்டத்தில் அதிகமாக காதல் திருமணம் நடந்து வருகிறது. இதனால் அவர்களது பெற்றோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த சமூக அக்கரையுடன் தான் ரஞ்சித் குழந்தை ℅ கவுண்டம்பாளையம் என்ற படத்தை எடுத்திருக்கிறார். இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
Also Read : எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்