புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கேப்டன் பதவிக்காக மூக்கை உடைத்து ரத்தம் சிந்திய ரஞ்சித்.. பெண்கள் அணியை தூக்கி நிறுத்திய ஒரே ஒரு போட்டியாளர்

Bigg boss 8 Tamil Caption Task: பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் யார் கேப்டன் பதவியை ஏற்க போகிறார் என்பதற்கான டாஸ்க் தற்போது முடிந்திருக்கிறது. அதில் கொடுத்திருக்கும் டாஸ்க் என்னவென்றால் ஒரு கட்டத்திற்குள் 5 போட்டியாளர்கள் நிற்க வேண்டும். இவர்களை அவுட் பண்ணும் விதமாக ஒரே ஒரு போட்டியாளர் வந்து கண்கட்டி கொண்டு கையில் வைத்திருக்கும் பலூன் மூலம் அவர்களே டச் பண்ணி வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான்.

அதன்படி ஆண்கள் அணியில் இருந்து தீபக், முத்துக்குமார், ஜெஃப்ரி, விஜே விஷால், சத்யா கட்டத்திற்குள் இருந்தார்கள். இவர்களை அவுட் பண்ணும் விதமாக தர்ஷா கண்ணை கட்டிகிட்டு வந்து ஒவ்வொருவரையாக அவுட் பண்ணினார். கடைசியில் டஃப் கொடுக்கும் விதமாக விஜே விஷால் விளையாடினார். ஆனால் தர்ஷா இவரையும் அவுட் பண்ணிவிட்டார்.

அடுத்ததாக பெண்கள் அணியில் இருந்து பவித்ரா, சௌந்தர்யா, சாச்சனா, சுனிதா, ஆனந்தி கடத்திற்க்குள் இருந்தார்கள். இவர்களை அவுட் பண்ணும் விதமாக ரஞ்சித் களத்தில் இறங்கினார். ஆனால் ரஞ்சித் விளையாடும் போது தெரியாத்தனமாக சுவற்றில் முட்டிக்கொண்டு முகத்தில் காயம் ஏற்படும் அளவிற்கு மூக்கு கீழே ரத்தம் வந்துவிட்டது.

ஆனாலும் கஷ்டப்பட்டு விளையாண்ட ரஞ்சித் இந்த விளையாட்டில் தோற்றுப் போய்விட்டார். கடைசியில் ஆண்கள் அணி பெண்கள் அணியிடம் அப்பட்டமாக தோற்றுப் போய்விட்டது. இதனால் பெண்கள் அணியில் மறுபடியும் தலைமை பொறுப்பை ஏற்பது யார் என்றால் தர்ஷிகா. இவர் ஏற்கனவே முதல் வாரத்தில் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

மறுபடியும் இந்த டாஸ்க் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தலைமை பொறுப்பை ஏற்று விட்டார். அந்த வகையில் எந்த விளையாட்டு வந்தாலும் நான் அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இறங்கி துணிச்சலுடன் விளையாண்டு பெண்கள் அணியை ஓரளவுக்கு இவர் தான் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இனி இந்த வாரம் முழுவதும் பெண்கள் கை ஓங்கி நின்று ஆண்கள் அணியை அடக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News