தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. இவரது பெயருக்கு ஏற்றது போலவே இந்த படமும் இவருக்கு ராசி ஆகவே அமைந்தது .
அதன் பிறகு சங்கத்தமிழன் மற்றும் அடங்கமறு, அயோக்கியா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அடங்கமறு படத்தை தவிர இவருக்கு வேறு எந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
தற்போது இவரது நடிப்பில் துக்ளக் தர்பார் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெற்றி அடைந்தால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் ராசி கண்ணா சமீப காலமாக தனது உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அடர்ந்த காட்டில் இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
தற்போது இவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாவ் மற்றும் நைஸ், 11th ஸ்கூல் ஆரம்பிக்க போது நீ வேற! என ஒரு ரசிகர் தனது ஆதங்கத்தை இவரது கமெண்ட் பாக்ஸில் தெரிவித்துள்ளார்.