புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எனக்கு இப்படிப்பட்ட பையனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்.. அடம்பிடிக்கும் ராசி கண்ணா

ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றியும் தனக்கு வரப்போகும் கணவர் பற்றியும் பல கனவுகள் ஆசைகள் இருக்கும். அந்த வகையில் நடிகை ராசி கண்ணா அவர்களின் வருங்கால கணவர் பற்றிய கனவுகளை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரதானமாக நடித்து வருபவர். இவர் தெலுங்கில் மதராஸ் கஃபே என்ற திரைப்படத்தில் ரூபி சிங் கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

அதைத் தொடர்ந்து தமிழில் இமைக்காநொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்திலும் நடித்துள்ளார். தற்போது படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக இருக்கிறார் ராசி கண்ணா.

ஒரு பேட்டியில் ராசிக் கண்ணாவிடம் உங்களின் வருங்கால கணவர் பற்றிய கனவுகள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சுவாரசியமான பதில்களை கூறியுள்ளார். தற்போதைக்கு திருமணம் பற்றிய எந்த திட்டமும் இல்லை என்று கூறியவர்.

rashi-khanna
rashi-khanna

வருங்காலத்தில் தனக்கு வரவிருக்கும் கணவர் கடவுள் பக்தி கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அழகு என்பது முக்கியம் இல்லை எனவும் பதிலளித்துள்ளார்.

தற்போது ராசி கண்ணா பின் துக்ளக் பார் அரண்மனை3 போன்ற திரைப்படங்கள் முடிவடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும்,சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் இரண்டு படங்களும் மலையாளத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Trending News