வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வீட்டுப் பணியாளர் காலில் விழுந்த ராஷ்மிகா.. எக்ஸ்பிரஸ் குயினின் பரபரப்பான பேட்டி

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது கோலிவுட் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து டாப் ஹீரோயின் ஆக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு விஜய்யுடன் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தினமும் தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் எனக் கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் ஒன்றில் தனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசிய ராஷ்மிகா, சின்ன சின்ன விஷயத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுப்பாராம்.

Also Read: பிட்டு துணியில் டிரஸ் தச்ச ராஷ்மிகா.. விருது விழாவில் அரங்கேறிய கூத்து

தினமும் காலையில் எழுந்தவுடன் செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதும், நண்பர்களை சந்திப்பதுமே அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை ஒரு நபரை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். ஆகையால் யாராவது ஏதாவது சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மனநிலை கொண்டவராக இருப்பாராம்.

மேலும் தன்னுடைய டைரியில் சின்னச் சின்ன விஷயங்களை பதிவு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கும் ராஷ்மிகா, சூட்டிங் முடிந்து வீடு திரும்பியதும் மரியாதை தரும் விதமாக அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குவாராம். இதில் வேறுபாடு காட்டக் கூடாது என்பதற்காக அவருடைய வீட்டு உதவியாளர்களின் பாதங்களையும் தொட்டு ஆசீர்வாதம் வாங்குவாராம்.

Also Read: வளர்த்துவிட்டவரை மதிக்காத ராஷ்மிகா.. நச்சென்று பதில் கொடுத்த வெற்றி பட இயக்குனர்

மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் தன்னுடைய நலனை விரும்பக் கூடியவர்கள். ஆகையால் அனைவரையும் மதிப்பேன். நான் யார் என்பது இதுதான் என்று பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்துள்ளார். நேஷனல் கிரஷ், எக்ஸ்பிரஸ் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கக்கூடிய ராஷ்மிகாவின் இந்த செயலை கேட்டதும் பலருக்கும் புல்லரிக்கிறது என்று சோசியல் மீடியாவில் கருத்து பதிவிடுகின்றனர்.

மேலும் ராஷ்மிகா கடைசியாக மிஷன் மஜ்னுவில் நடித்தார். இது கடந்த ஜனவரி 20ம் தேதி நெட்பிளிக்ஸில் திரையிடப்பட்டது. அதன் பின் ரன்பீர் கபூர் தயாரித்துள்ள அனிமல் என்ற படத்தின் வெளியீட்டிற்காக ராஷ்மிகா காத்திருக்கிறார். இந்தப் படத்தை சந்தீப் வங்கா இயக்கி உள்ளார். மேலும் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா ஜோடியாக நடிக்கிறார்.

Also Read: ஓவர் மெதப்பில் இருக்கும் ராஷ்மிகா.. அடிச்சு துரத்திய பிரம்மாண்ட இயக்குனர்

Trending News