திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காதலருடன் ஜிம் ஒர்க் அவுட் செய்து அசத்தும் ராஷ்மிகா.. வைரலாகும் மிரர் செல்ஃபி புகைப்படம்

கன்னட படத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதகோவிந்தம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இளம் பெண்களின் ஃபேவரைட் நாயகனான விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் பயங்கர வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து டியர் காம்ரேட் என்ற மற்றொரு படத்தில் நடித்திருந்தனர். அப்படமும் ஓரளவிற்கு நல்ல வரவேற்பையே பெற்றது. அடுத்தடுத்து இவரது படங்கள் வெற்றி பெறவே தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.

தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்திருந்த ராஷ்மிகாவிற்கு, சமீபத்தில் பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து தனது சம்பளத்தை 3.5 கோடியிலிருந்து ஒரேயடியாக 10 கோடியாக ராஷ்மிகா உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் நடிகை ராஷ்மிகாவின் காதல் குறித்த சர்ச்சை ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ராஷ்மிகாவும், இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக சமீபகாலமாக டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை ராஷ்மிகா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

rashmika-vijay-devarkonda-1
rashmika-vijay-devarkonda-1

முன்னதாக ரிஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்த ராஷ்மிகா மந்தனாவின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால், சில காரணங்களால் இவர்களது திருமணம் பாதியில் நின்றது. இந்நிலையில், விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து இவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Trending News