புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சம்பளத்தில் நயன்தாரா த்ரிஷாவை முந்திய.. ட்ரெண்ட் செட்டர் நடிகை

நடிகை ராஷ்மிக மண்தானா தான் தற்போது இந்தியாவை பொறுத்த வரையில் மோஸ்ட் வான்டெட் ஹீரோயினாக இருக்கிறார். பான் இந்திய லெவலில் ஒரு கலக்கு கலக்குகிறார். சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா படம் வெறும் 5 நாட்களில் 1000 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை படைத்தது. இதை தொடர்ந்து ரஷ்மிக்காவின் மார்க்கெட் சர் என்று உயர்ந்துகொண்டே வருகிறது.

ராஷ்மிகா தான் வேண்டும் என்று பல முன்னணி ஹீரோக்கள் அடம்பிடிக்கின்றனர். அப்படி, நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்தியுடன் இணைந்து பண்ணும் புதிய படத்துக்கு ராஷ்மிகா தேதி கேட்டு காத்திருக்கிறார். இப்படி இருக்க, இவர் சம்பளமும் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நயன்தாரா த்ரிஷாவையே முந்திட்டாங்க..

ராஷ்மிகா ஆரம்பத்தில் அவர் Cuteness-ஆள் ரசிகர்களை கொள்ளை கொண்டார். ஆனால் தற்போது, கிளாமர் உடை, அசத்தல் டான்ஸ், ரொமான்ஸ் என்று நெருப்பாக நடித்து வருகிறார். வட மாநிலங்களில் புஷ்பா 2 வசூலுக்கு ராஷ்மிகா ஒரு முக்கிய காரணம் என்று கூட கூறலாம்.

இந்த நிலையில், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். இதுவரை ஒரு படத்தில் நடிக்க, சுமார் 2 கோடி முதல் 4 கோடி வரை பெற்றுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தற்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி 12 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு வாங்கவுள்ளார்.

நயன்தாரா திரிஷா இருவரும் ஒரு படத்துக்கு 10 கோடி சம்பளம் பெரும் நிலையில், இவர் அவர்களையே அதுவும் ஷார்ட் டைம்-ல் மிஞ்சிவிட்டாரே என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

இனி வரும் அடுத்த படமும் 1000 கோடி தாண்டி வசூல் செய்தால், confirm 20 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்திவிடுவார்.

Trending News