திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கண்ணீர் விட்டு கதறி அழும் ராஷ்மிகா மந்தனா.. எல்லாத்துக்கும் இவங்க தான் காரணம்

தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படமான கீதாகோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு வசூலை பெற்றது. ஆனால் ராஷ்மிகா மந்தனா எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனாலே அம்மணி போங்க தம்பி இனிமேல் உங்க சைடு நான் வரல என சொல்லிவிட்டு அப்படியே தெலுங்கு படத்திற்கு ஓடிப் போய்விட்டார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் அதிகமான படங்களில் நடிப்பதால் அங்கே இருக்கும் நபர்கள் இவர் ஒரு படத்துக்கு 2 கோடி 3 கோடி சம்பளம் வாங்குகிறார் என பீதியைக் கிழப்பி உள்ளனர்.

rashmika-mandanna-cinemapettai
rashmika-mandanna-cinemapettai

ராஷ்மிகா மந்தனா அதிக அளவில் பணம் வைத்திருப்பதாகவும் நிலம் மற்றும் ஆவணங்கள் ரொக்கமாக இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

சும்மா இருப்பார்களா நம்ம இன்கம்டாக்ஸ் ஊழியர்கள் உடனே காரை எடுத்துக்கொண்டு ராஷ்மிகா மந்தனா வீட்டிற்கு போய் சோதனை செய்துள்ளனர். ஆனால் இறுதியாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதைப்பற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு நான் 2 கோடி எல்லாம் கண்ணில் கூட பார்த்ததில்லை என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

Trending News