சில வருடங்களுக்கு முன்பு கன்னட சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ரஷ்மிகா மந்தனா தற்போது இந்தியாவே கொண்டாடும் நாயகியாக வளர்ச்சி பெற்றுள்ளார். அதுவும் குறைந்த கால கட்டங்களில்.
இப்போதைக்கு இருக்கும் நடிகைகளில் எக்ஸ்பிரஷன் குயின் என்றால் ரஷ்மிகா மந்தனா தான் என குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் இந்த படம் நடிகை நஸ்ரியா நசீம் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கன்னட சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்தவர் தற்போது தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அந்த வகையில் பாலிவுட்டில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதன்மூலம் இந்திய கிரஷ் என்ற லிஸ்டில் இணைந்து விட்டாராம் ரஷ்மிகா மந்தனா. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் தான் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.
ரஷ்மிகா மந்தனா சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டால் குறைந்தது 2 மில்லியன் லைக்குகள் குவிகின்றன. மேலும் அவனை பார்த்ததும் என்னுடைய இதயத்தை தொலைத்து விட்டேன் என ரஷ்மிகா மந்தனா ஒரு பதிவு போட்டது பலரையும் கோபப்படுத்தியுள்ளது.
20 லட்சம் லைக்குகளை குவித்த இந்த புகைப்படத்தில் ரஷ்மிகாவை மிகவும் கவர்ந்தவர் வேறு யாருமில்லை, ஒரு சின்ன நாய்க்குட்டி தான். அந்த நாய்குட்டியுடன் ரஷ்மிகா கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நான் இருக்க வேண்டிய இடம் அது என டென்ஷனாகி கமெண்ட்டுகளை அள்ளி தெளிக்கின்றனர்.