தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை எப்போதுமே பிறமொழி நடிகர்களுக்கும் வாய்ப்பும் ஆதரவும் கொடுப்பது வழக்கம். அந்த மாதிரி சமீப காலமாக மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்த ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது ஒரு சில தமிழ் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி உள்ளார்.
முதலில் இவர் நடிப்பில் வெளியான படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் எப்போது தமிழ் சினிமாவிற்கு வருவார் என ஏங்கி வந்த நிலையில் அதனை சுல்தான் திரைப்படம் முறியடித்தது.
சுல்தான் திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படம் தெலுங்கு சினிமாவை போல் காட்சிகள் அதிகம் அமைந்ததால் பெரிதளவு ரசிகர்களை ரசிகர்களுக்கு பிடிக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு வெற்றிபெற்றது.

சமீபகாலமாக சின்னத்திரை நடிகை முதல் பெரியதிரை நடிகைகள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது என ஒரு சில சேட்டைகளை செய்து வருகின்றனர்.
அப்படி ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா மந்தனா அவரிடம் அல்லு அர்ஜுன் எப்படிப்பட்டவர் என கேள்வி எழுப்ப அதற்கு ராஷ்மிகா மந்தனா அவர் ரொம்ப எளிமையானவர் மற்றும் இனிமையானவர் என புகழ்ந்து தள்ளியுள்ளார். அதனால் தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.