திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ரஷ்மிகாவுடன் நெருக்கம் காட்டும் இளம் நடிகர்.. எங்க போனாலும் பின்னாடியே போறாராமே!

இப்போதைக்கு நேஷனல் கிரஷ் என்ற பெயருடன் வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 20 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 2 கோடி பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ஆரம்பத்தில் இவர் நடித்த கீதா கோவிந்தம் போன்ற சில படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து அவருக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்தன.

தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவறாததால் மிகப் பெரிய நடிகர் ஒருவரின் பட வாய்ப்புக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறாராம்.

ரஷ்மிகா மந்தனா ஆரம்பத்திலேயே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரைச் சென்று பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்பது தெரிந்த ஒன்றுதான்.

அதன்பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவர்கொண்டாவுடன் என்பவருடன் நெருக்கம் காட்டி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இருவரும் நண்பர்கள் தான் என மறுத்தனர்.

தற்போது இருவரும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டுவதாக அவர்களது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் இருவரும் மீண்டும் காதல் கிசுகிசுவை தொடங்கி விட்டனர் என கிளப்பி விட்டனர். இந்த செய்திதான் தற்போது காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது.

rashmika-vijay-devarakonda-cinemapettai
rashmika-vijay-devarakonda-cinemapettai

Trending News