திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

இந்திய கிரஷ் ராஷ்மிகா முதன் முதலில் பார்த்த தளபதியின் படம்.. இது வேற லெவல் ஹிட் படமாச்சே!

கன்னட படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த கீதாகோவிந்தம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் ராஷ்மிகா. இப்படமும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தது.

தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகாவை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக எக்ஸ்பிரஷன் குயின் என்றே அழைத்து வருகிறார்கள். ராஷ்மிகாவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகளவில் உள்ளதால், அவருக்கு நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இருப்பினும் இளைஞர்கள் மத்தியில் ராஷ்மிகாவிற்கு உள்ள புகழ் சற்று கூட குறையவே இல்லை. தற்போது வரை இவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே உள்ளார். சோஷியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அடிக்கடி இன்ஸ்டாகிராம் லைவில் தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

மேலும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து பல பதிவுகளை செய்து வருவார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சுமார் 20 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தான் முதன் முதலாக திரையரங்கில் பார்த்த படம் தொடர்பான தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது அவர் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தை தான் முதன் முதலாக திரையரங்கில் சென்று பார்த்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ghilli-cinemapettai
ghilli-cinemapettai

ராஷ்மிகா ஏற்கனவே பல பேட்டிகளில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என கூறியுள்ளார். அது மட்டுமின்றி அவருடன் இணைந்து படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் திரையரங்கில் பார்த்த முதல் படம் விஜய் படம் என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News