புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோடம்பாக்கத்திலேயே டேரா போட்ட ராஷ்மிகா.. வலையில் சிக்கிய விவாகரத்து நடிகர்

ராஷ்மிகா தொட்டதெல்லாம் தொடங்கும் என்பது போல அவர் நினைத்த காரியம் எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற அவரது ஆசை சுல்தான் படத்தின் மூலம் நிறைவேறியது. ஆனால் சுல்தான் படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

அதன் பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு ராஷ்மிகாவுக்கு கிடைத்தது. அதாவது விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ராஷ்மிகாவின் பல வருட கனவு என்பதை அவரே கூறியுள்ளார்.

Also Read : படு மோசமாக போஸ் கொடுத்த வாரிசு பட கதாநாயகி.. விஜய்க்கு ஜோடியானதும் ஆடையை குறைத்த ராஷ்மிகா

தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சாதாரணமாக பண்டிகை என்றாலே விஜய் ரசிகர்கள் அலற விடுவார்கள். அதுவும் இந்த பொங்கல் பண்டிகைக்கு வாரிசு படம் வெளியாகிறது என்பதால் கண்டிப்பாக படம் 100% வெற்றி என்று கூறப்படுகிறது.

இதனால் தற்போது ராஷ்மிகாவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் சென்னையிலேயே டேரா போடும் அளவிற்கு கைவசம் நிறைய படங்களை ராஷ்மிகா வைத்துள்ளார்.

Also Read : அஜித்திற்காக விட்டுக்கொடுத்த விஜய்.. இப்படிப்பட்ட மனசு யாருக்கு வரும்

அதுவும் விஜய்க்கு அடுத்தபடியாக தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படங்கள் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாக உள்ளது.

இந்த படத்தில் தான் தனுசு உடன் ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இவ்வாறு தமிழ் சினிமாவிலும் ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள உள்ளார்.

Also Read : அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்

Trending News