வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஹோம்லி லுக்கில் ஸ்கோர் செய்த நேஷனல் கிரஷ் ராஷ்மிகா.. காட்டுத்தீயாய் பரவும் அனிமல் பட போஸ்டர்

Rashmika: புஷ்பா படத்தின் மூலம் ராஷ்மிகா பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த நிலையில் தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை நினைவாக்கி கொண்டார்.

இந்நிலையில் தற்போது ஒரே ஒரு போஸ்டரால் நேஷனல் கிரஷ் ஆக ராஷ்மிகா மாறி இருக்கிறார். அதாவது அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி இப்போது அனிமல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

Also Read : மதத்தை ஒழிக்க விஜய்யின் அப்பா செய்த வேலை.. ஆனா தன்னை வேறுமாறி அடையாளப்படுத்தும் தளபதி

மேலும் அனிமல் படத்தில் நடித்திருக்கும் அனில் கபூரின் போஸ்டரை சமீபத்தில் படகுழு வெளியிட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் கீதாஞ்சலியாக ராஷ்மிகா நடித்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹோம்லி லுக்கில் ராஷ்மிகா இருக்கிறார்.

அதாவது அதிக மேக்கப் இல்லாமல் புடவையில் குறைந்த சிரிப்புடன் இருக்கும் இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே ராஷ்மிகாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த புகைப்படத்தின் மூலம் அது இரட்டிப்பாக மாறி இருக்கிறது.

Also Read : விஜய்யை மதிக்காமல் பேராசையில் டாப் ஹீரோவை சந்தித்த சஞ்சய்.. உனக்கு வயசு பத்தல என திருப்பி அனுப்பிய சோகம்

மேலும் அனிமல் படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதுவும் இந்த படம் பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கு முன்பு ராஷ்மிகாவின் புகைப்படத்தால் இப்போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஹோம்லி லுக்கில் ராஷ்மிகா

rashmika
rashmika

Also Read : வசமாக சிக்கிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா.. ஆதாரத்தோடு வெளியான லிவிங் ரிலேஷன்ஷிப் போட்டோ

Trending News