வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

86 வயதில் மறைந்த ரத்தன் டாட்டா.. முன்னாள் காதலி போட்ட பதிவு

Ratan Tata : இன்று அதிகாலை பலரும் மொபைல் போனை எடுத்து பார்க்கும்போது அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது ரத்தன் டாடா மறைவு செய்தி. பல வருடங்களாக இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருந்த ரத்தன் டாடா உடல்நல குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

86 வயதாகும் இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் இவரது வாழ்க்கையில் சில காதல்களும் வந்து போய் உள்ளது. அதில் 70 மற்றும் 80களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த சிமி கேரேவால் மற்றும் ரத்தன் டாடா இருவரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக அப்போது செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களினால் இவர்களது திருமணம் கைகூடாமல் போய்விட்டது. ஆனால் சிமி கரேவால் இந்த காதல் தோல்விக்குப் பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ரத்தன் டாட்டா இறப்பிற்கு சிமி கேரேவால் பதிவு

simi-garewal
simi-garewal

ஆனால் கடைசி வரை ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வந்தார். அவருடைய மறைவு செய்தி தெரிந்தவுடன் சிமி கேரேவால் தனது எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவு பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

அதாவது தனது முன்னாள் காதலன் இறப்புக்கு மிகுந்த உருக்கத்துடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். நீ போய் விட்டாய் என்கிறார்கள், உங்கள் இழப்பை தாங்குவது மிகவும் கடினம், பிரியாவிடை நண்பரே என்று பதிவிட்டு இருக்கிறார். சிமி கேரேவாலின் இந்த பதிவு இப்போது பலரையும் கலங்க செய்திருக்கிறது.

ஒருமுறை தனது தொலைக்காட்சியில் ரத்தன் டாடாவை சிமி பேட்டி எடுத்திருந்தார். அப்போது உலகில் மிக சரியானவர் என்றும் நல்ல நகைச்சுவை குணம் உடையவர் என்றும் இவரை பற்றி நிறைய விஷயங்களை புகழ்ந்து பேசி இருந்தார் சிமி.

Trending News