திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரத்தன் டாடா சூர்யா இல்லையா.. அதிர்ச்சி தகவலை கூறிய கே ஜி எஃப் பட நிறுவனம்

சூரரை போற்று என்ற படத்தை உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. ஏர் டெக்கான் கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் சுதா கொங்கரா எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதாவது சுதா கொங்கரா, சூர்யா கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

Also Read : 10 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் சூர்யா-42.. இன்னும் பல சுவாரஸ்யமான அப்டேட் கொடுத்த இயக்குனர்

இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படம் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கப் உள்ளதாக தகவல் கசிந்தது. இப்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சில தகவல்களை கூறியுள்ளது.

அதன்படி சுதா கொங்குரா இயக்கும் படம் ஒரு பயோபிக் படம் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளனர். மேலும் இது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : கேட்டதை கொட்டி கொடுத்த பாலா.. பல நாளாகியும் மதிக்காத சூர்யா.!

இப்போது ரத்தன் டாடாவாக சூர்யா நடிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் சூர்யா இப்போது வணங்கான், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

ஆகையால் இந்த படங்களை முடித்த கையுடன் சுதா கொங்கரா படத்தில் இணைவார் என எதிர்பார்க்கலாம். அதற்குள்ளாகவே ஹிந்தியில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தையும் சுதா விரைந்து முடிக்க உள்ளார். மீண்டும் அடுத்த தேசிய விருதுக்கு இந்த கூட்டணி விரைவில் இணைய உள்ளது.

Also Read :சூர்யாவுடன் இருக்கும் பிரச்சனையை பொது இடத்தில் உறுதிசெய்த பாலா.. வணங்கான் பட நிலைமை இதுதான்!

Trending News