தமிழ் சினிமாவில் காதல் பட வரிசையில் முக்கியப் பங்கு வகிக்கும் படம் தான் ரட்சகன். இந்த படமானது வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளியான ரட்சகன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்ததே படத்திற்கு சிறப்பம்சமாக அமைந்தது.
இதில் நாகர்ஜுனா-சுஷ்மிதா இருவரும் தங்களது அட்டகாசமான நடிப்பை வெளிக்காட்டிருப்பர். காதல் கசப்போருக்கு கூட இந்தப் படத்தைப் பார்த்தால் காதலிக்கத் தோன்றும். அப்படி ஒரு படம் தான் ரட்சகன். தற்போது இந்தப் படத்திற்கான பட்ஜெட்டை இயக்குனர் பிரவீன்காந்த் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
ஏனென்றால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை பற்றி படம் வெளியாகும்போது மிகைப்படுத்தி கூறியுள்ளதை, தற்போது ஒத்துக் கொண்டிருந்தது சோஷியல் மீடியாக்களில் பெரிதும் பேசப்பட்டதது.
இதுகுறித்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிடுகின்றனர். தற்போது ரட்சசன் இயக்குனர் பிரவீன்காந்த், ‘ரட்சசன் படத்தின் பட்ஜெட் 15 கோடி என்பதால் அந்த காலகட்டத்தில் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
பொதுவாக படத்திற்கான பட்ஜெட்டை மிகைப்படுத்தி சொன்னால்தான் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் எழுந்து தியேட்டர்களில் வந்த படம் பார்க்கத் தோன்றும். ஏனென்றால் 500 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை, 100 ரூபாய் டிக்கெட்டில் பார்ப்பதே பார்வையாளர்களுக்கு திருப்தியளிக்கும்.
ஏனெனில், அதிக விலைக்கு விற்கப்படும் துணியை குறைந்த விலையில் தள்ளுபடிக்கு வாங்கும்போது, கிடைக்கும் திருப்தியே தனி சுகம். அதைத்தான் சினிமாவிலும் வெவ்வேறு விதத்தில் கையாளுகின்றனர்.
![ratchagan-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/ratchagan-cinemapettai.jpg)
ஏற்கனவே செல்வராகவன் குறிப்பிட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த திரௌபதி இயக்குனர் மோகனை தொடர்ந்து தற்போது ரட்சகன் இயக்குனர் பிரவீன் காந்த்-தும் செல்வராகவனுக்குசப்போர்ட்டாக பேசியுள்ளார்.