தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம் ராட்சசன். இப்படத்தை ராட்சசுடு என்ற பெயரில் தெலுங்கில் ரமேஷ் வர்மா ரீமேக் செய்திருந்தார்.
பெல்லம்பொண்ட ஸ்ரீனிவாஸும், அனுபாமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர். சத்யநாராயண கொனரு படத்தை தயாரித்திருந்தார். பொதுவாக எந்த மொழியில் முதல் பாகம் தயாரானதோ அந்த மொழியில்தான் இரண்டாம் பாகத்தை எடுப்பார்கள்.
ஆனால், மாறாக ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் முதலில் எடுக்கிறார்கள். ராட்சசுடு 2 என்று அதற்கு பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், படத்தின் ஹீரோ யார் என்பது முடிவாகவில்லை.
இந்நிலையில், படத்தின் நாயகன் குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ரமேஷ் வர்மா, ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க இருக்கிறோம் என்று மட்டும் பதிலளித்துள்ளார். இவர் சமீபத்தில் சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறியுள்ளார்.
அதனால், ராட்சசுடு 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே டஜன் கணக்கில் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் ராட்சசன் 2 தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வாய்ப்பில்லை என ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் விஜய் சேதுபதியை நம்பமுடியாது. அவர் நடித்தாலும் நடிப்பார் என மற்றொரு புறம் பேசி வருகிறார்கள்.
