புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Hari : 3 நாள் அரண்மனையின் வசூலை கூட தாண்டாத ரத்னம் மொத்த வசூல்.. ஓடிடியில் எப்ப தெரியுமா? ஹரியின் பாச்சா பலிக்குமா!

சமீபத்தில் தியேட்டரில் வெளியான அரண்மனை 4 படம் வசூலை அள்ளி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழ் சினிமாவின் முதல் ஹிட் ஆக இந்த படம் அமைந்திருக்கிறது.

மேலும் படம் வெளியாகி மூன்றே நாட்களை கிட்டத்தட்ட 23 கோடி வசூலித்திருக்கிறது. உலகளவில் கிட்டத்தட்ட 34 கோடி வசூல் அள்ளி இருக்கிறது. மேலம் தொடர்ந்து படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்கு முன்னதாக வெளியானது தான் ரத்னம்.

ஹரி, விஷால் கூட்டணியில் வெளியான இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தை பெறவில்லை. இதுவரையிலும் கிட்டத்தட்ட 20 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இப்போது மே 24 ஆம் தேதி இந்த படம் அமேசானில் வெளியாக இருக்கிறது.

ஓடிடியில் வெளியாகும் ரத்னம்

ரத்னம் படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஹரி போட்ட கணக்கு எல்லாமே இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டது. அவரது பாச்சாவும் பலிக்காமல் போய்விட்டது.

எப்படியும் ரத்னம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து விடலாம் என்று ஹரி மற்றும் விஷால் இருவருமே கணக்கு போட்டு வைத்திருந்தனர். ஆனால் ரத்னம் படம் வசூலை பெறாத நிலையில் இவ்வளவு சீக்கிரம் ஓடிடியில் வெளியாவது அவர்களுக்கு பின் விளைவாக அமைந்துள்ளது.

அதோடு கடந்த வாரம் அரண்மனை 4 வெளியானதால் ரத்னம் படத்தின் வசூல் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாகத்தான் சீக்கிரமாகவே ரத்னம் படம் ஓடிடியில் வர இருப்பதாக தகவல் இருக்கிறது.

Trending News