ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. எப்படி ஒரு காலத்தில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் தான் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வந்தார்களோ அதேபோல தற்போது அக்ஷய்குமார் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
அதிலும் குறிப்பாக அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம் பெற்றதால் பெருவாரியான ரசிகர்கள் படத்தினை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அக்ஷய்குமார் ஹிந்தியில் ஒரு த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார்.
அதாவது பெல்பாட்டம் என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் அக்ஷய குமார், வாணி கபூர், லாரா தத்தா மற்றும் ஹேமா குரோஷி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பிரிவியூ ஷோ பார்த்துவிட்டு படக்குழு மிக உற்சாகத்தில் உள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு ஹிந்தி திரையுலகில் அடுத்த அடுத்து அக்ஷய் குமார் எந்த படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழில் வெளியான ராட்சசன் திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும் இப்படத்தில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 9 கோடி பட்ஜெட்டில் வெளியான ராட்சசன் திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதனால் அக்ஷய் குமார் இப்படத்தில் நடிப்பதை தாண்டி படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.