திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

ரவீனாவை எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் பாடிகார்ட்.. நிக்சன் பத்த வச்ச நெருப்பு

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போதெல்லாம் சூர மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது. ப்ரோமோவுக்கு கன்டென்ட் கிடைப்பதே அக்கப்போராக இருந்தால் எபிசோட் எந்த அளவுக்கு இருக்கும். அதனாலேயே இப்போது யாரும் நிகழ்ச்சியை பார்க்க விரும்புவதில்லை.

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோ கூட, என்ன பிக்பாஸ் இது என கேட்க வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு கன்டென்ட்டே இல்லாமல் மணி புலம்புவதை ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அதில் மணி வயிற்றெரிச்சலில் அனத்தி கொண்டிருக்கிறார்.

Also read: பிக்பாஸ் பூகம்ப டாஸ்க்கால் கிளம்பும் பூதம்.. விசித்ராவை போல் ஆண் போட்டியாளருக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்

ஐசு வீட்டை விட்டு வெளியில் போன பிறகு நிக்சன் தனி மரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவ்வப்போது அவர் ரவீனாவிடம் பேசுவதை மணி விரும்பவில்லை. அதைத்தான் இப்போது அவர் எமோஷனல் பிளாக்மெயிலாக ரவீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நிக்சன் செய்யறது எனக்கு புடிக்கல. கேமுக்காக ஏதோ ஒன்னு பண்றான். அதை எல்லாம் தாண்டி எனக்கு உன் மேல ஒரு இது இருக்கு. இப்படியே போச்சுன்னா நான் இந்த ஷோவை விட்டு சென்று விடுவேன் என ரவீனாவுக்கு பயத்தை காட்டுகிறார். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இவர் ரவீனாவை பாடிகார்ட் போல் தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்.

Also read: விஸ்வரூபம் எடுக்கும் விசித்ராவின் அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்.. ஹீரோவுக்கு எதிராக கொடி பிடிப்பாரா ஆண்டவர்.?

தப்பி தவறி ரவீனா யாருடனாவது பேச சென்றால் உடனே மணிக்கு பொசசிவ் வந்து விடுகிறது. அதை தெரிந்து கொண்டால் நிச்சயம் தற்போது நன்றாக பற்ற வைத்திருக்கிறார். இப்படியாக ரொம்பவும் க்ரிஞ்சாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பிக் பாஸ் ஆடியன்ஸ் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Trending News