புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மணியை விட்டு கூல் சுரேஷ் உடன் ஒத்து ஊதும் ரவீனா.. டம்மி பீசுகளை வைத்து மொக்க பண்ணும் பிக்பாஸ்-7

Bigg Boss 7 Tamil: விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் 7, 20 நாட்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 பேர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் 11 பேர் இந்த வாரத்திற்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த வாரம் சனிக்கிழமை 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைகிறார்கள்.

மற்ற சீசன்களை கம்பேர் செய்யும் போது இந்த சீசனில் எதற்கு எடுத்தாலும் சண்டை சச்சரவு என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது கமலஹாசனும் கலந்து கொண்ட மூன்று வாரங்களின் எபிசோடுகளிலும் இவர்களுடைய பஞ்சாயத்தை தான் தீர்த்து வைத்திருக்கிறார் இந்த சீசனில் காரசாரத்துக்கு எந்தவித குறை இல்லை என்றாலும் சிறப்பாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போட்டியாளர்கள் யாரும் இல்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே அவர் தன்னுடைய முடிவில் நிலையாக இருப்பதில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதே போன்று தான் நிக்சனும். கடந்த வாரம் முழுக்க நிக்சனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அதை வைத்து தான் அவர் ஓட்டிங்கில் சேவ் ஆனார். தற்போது அவரும் தன்னுடைய பெயரை கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் செய்து வருகிறார்.

கூல் சுரேஷ் அதிகமாக காமெடி கன்டென்ட் கொடுத்தாலும் விளையாட்டில் பார்க்கும்போது சுத்தமாக சரியில்லை. எந்த டாஸ்க்கிலும் ஜெயிப்பதும் இல்லை. அவ்வப்போது சென்டிமென்ட் கிரியேட் பண்ணி அழுகாச்சி சீனை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ரவீனா சொல்லவே தேவையில்லை அவர் எதற்காக பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் என்று பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மணி இப்போது ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று விட்டதால் ரவீனா, கூல் சுரேஷ் உடன் இணைந்து ஒத்து ஊதி வருகிறார். கூல் சுரேஷ் அடுத்த வாரம் சொல்லிவிட்டு நான் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று சொல்கிறார். அதற்கு ரவீனாவும் நானும் வீட்டை விட்டு வெளியே செல்ல போகிறேன், இங்கு யாரும் என்னிடம் சரியாக பேசுவதில்லை, பேசினாலும் நக்கலாக தான் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்.

மணி இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்று அங்கு நன்கு ஜெல்லாகிவிட்டார். ரவீனாவுக்கு பிக் பாஸ் வீட்டில் யாரும் நெருக்கமாக இல்லை. மாயா, பூர்ணிமா மற்றும் ஐஷு சேர்ந்து அவரைப் பற்றி புறம் பேசுகிறார்கள். இதனால் தான் ரவீனா வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில் கூல் சுரேஷ் மற்றும் ரவீனா இருவருமே அப்படி ஒரு முடிவு எடுத்து வெளியேறப் போவதில்லை.

Trending News