தமிழில் எத்தனையோ இயக்குனர்கள் நடிகர்கள் வந்ததும் போனதும் வழக்கமானது. அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர்கள் அவர்களுக்கும் மேல் தான். பெரிய நிறுவனங்களின் வருமாணம் கடந்து சிறு குறு தயாரிப்பாளர்கள் தனியாக வந்து சினிமாவின் ஆழத்தை கண்டு் அரண்டு போவதுமுண்டு. அப்படியாக ஒரு தயாரிப்பாளர் ரவீந்திரன் தன் வாழ்வியலை பகிர்ந்து கொண்டார்.
2014-ல் வெளிவந்து சுமாராக ஓடிய படம் “நலனும் நந்தினியும்” மைக்கேல் நாயகனாக நந்திதா நாயகியாக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கி வெளிவந்த படம் நலனும் நந்தினியும். படத்தை பொறுத்தவரை சினிமா ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படாதது என்றால் அது தயாரிப்பாளர் பெயர் தான் இந்தபடமே தயாரிப்பாளரை கவனிக்காமல் போனது.
4.75கோடிகள் செலவு செய்து எடுத்த படம் வெறும் 24லட்சங்களை சம்பாதித்தது என்றால் எத்தனை பெரிய இழப்பு. அத்தகைய இழப்பை கடந்து தான் சினிமாவில் பயணித்துள்ளார் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.
மிக மிக அவசரம் படத்தால் வணிக ரீதியிலான வருமாணம் வராமல் போனாலும் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொன்னதில் பெருமை என்றார். நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களின் வழியாக இப்போது ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த வனிதா பீட்டர் பால் மூன்றாம் திருமணம் குறித்த வீடியோக்களில் மீண்டும் பேசுபொருளானார். இப்படியாக இருக்கும் நபரின் சினிமாவின் ஆரம்பகால நிகழ்வு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நலனும் நந்தினியும் படத்தின் பொருளாதாராத்திற்காகா நண்பர்கள் உறவினர்கள் என பலரிடமும் கடனுதவி பெற்றிருந்தாராம்.
வணிக ரீதியில் தோல்வி கண்ட இப்படத்தால் பல்வேறு அவமானங்களை சந்தித்ததும், உறவுகள் நண்பர்களிடம் பெற்ற கடனால் அழுத்தத்திற்கு உள்ளானதையும் குறிப்பிட்டார். ஆண்டவன் கருனையில் அடுத்தடுத்த படங்களில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் அவரை சினிமாவை மேலும் நேசிக்க வைத்ததாம்.
அதற்கு ஏற்றார் போல் அவமானம் படுதோல்வி அத்தனையும் தன்னை பக்குவப்படுத்தியதாய் கூறினார். எந்த தொழிலும் நேசித்து செய்திருந்தால் நேசம் நிச்சயம் கைகொடுக்கும் என்று ஒரு தத்துவத்தோடு முடித்துக்கொண்டார்.