ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அத கொண்டு வரலைன்னா மாமியார் கொடுமை கன்ஃபார்ம்.. மகாலட்சுமிக்கு செக் வைத்த ரவீந்தர்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது சமீபத்தில் இணையத்தில் பெரிய பூதாகரமாக விடுத்தது. எந்த அறிவிப்பும் இல்லாமல் மிக ரகசியமாக இந்த திருமணம் நடந்ததினால் இணையத்தில் இது பிரளயத்தையே ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த வருகிறார்கள். தங்களை கேலி செய்பவர்களுக்கு ரவீந்தர் தக்க பதிலடி கொடுத்தார். சமீபத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை ரவீந்தர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

Also Read :எரிச்சலடைந்து மொத்த வருமானத்தையும் போட்டுடைத்த மகாலட்சுமி.. ரவீந்தரை வைத்து நான் இல்லை என காட்டம்

அதுமட்டுமின்றி மகாலட்சுமியின் புகைப்படங்களை தினம்தோறும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை புகைப்படத்துடன் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதாவது மகாலட்சுமி தினம்தோறும் நான் வெஜ் சாப்பிடக்கூடியவர் என்பதை ஒரு பேட்டியில் ரவீந்தர் கூறியிருந்தார்.

இன்று புரட்டாசி ஒன்று என்பதால் ரவீந்தர் வெஜிடேரியன் சாப்பாடு செய்து மகாலட்சுமியின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் எல்லோரும் ஃபேமிலி டைம் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக இருக்கிறது.

Also Read :நயன்தாரா ஸ்டைலில் தனிவிமானம், தனி தீவு.. தேனிலவுக்கு புறப்பட்ட மகாலட்சுமி-ரவீந்தர்

ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை அன்பே வா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டெலிவரி பாயாக மாறிவிட்டேன். மேலும் பொண்டாட்டி மகாலட்சுமி சாப்பிட்டு விட்டு எல்லா பாத்திரத்தையும் மறக்காமல் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடு.

அதை மட்டும் கொண்டு வரவில்லை என்றால் மாமியார் கொடுமை மட்டும் இன்றி என்னையும் டான்ஸ் ஷோவில் எங்க அம்மா சேர்த்து விடுவார்கள் என்று விளையாட்டாக ரவீந்தர் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பொண்டாட்டி மேல அவ்வளவு அன்பாக ரவீந்தர் சூட்டிங் ஸ்பாட்டுக்கே சாப்பாடு எடுத்து சென்றுள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read :மகாலட்சுமி ஜோடியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பிரபலம்.. எல்லாரு மனசுலயும் இதான் இருந்துச்சு

Trending News