வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரவீந்தர்- மகாலட்சுமியின் அநாகரீக பேட்டி.. கோபத்தில் கொந்தளித்து மன்னிப்பு கேட்கச் சொன்ன பிரபலம்

லிப்ரா ப்ரொடக்சன் கம்பெனியை நடத்தி வரும் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவர்களது திருமண பேச்சு தான். இவர்கள் தற்போது பல முன்னணி சேனல்களிலும் பேட்டி அளித்து காரசாரமான விவாதங்களையும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படி இவர்கள் சமீபத்தில் இவர்கள் அளித்த பேட்டியின் செய்தியாளரை பிரபல இசையமைப்பாளர் வெளுத்து வாங்கி இருக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சத்தியம் டிவி நெறியாளர் முக்தர் அஹமத் அவர்களை பற்றி பேசியிருக்கிறார்.

தயாரிப்பாளர் ரவீந்தர் – சீரியல்நடிகை மகாலட்சுமி திருமணம் செய்தியை வலைதளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன் வாழ்த்துக்கள். ஒரு சில மாதங்களாக சத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் அஹமத் என்பவர் அரசியல் தலைவர்களை முகத்திரையை கிழிக்கும் வகையில் அழகாக பேசி வருகிறார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

Also Read: எரிச்சலடைந்து மொத்த வருமானத்தையும் போட்டுடைத்த மகாலட்சுமி.. ரவீந்தரை வைத்து நான் இல்லை என காட்டம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப புதுசா ஒரு நல்ல தொகுப்பாளர் கிடைத்திருக்கிறார் என்று, ஆனால் ரவீந்தர் விஷயத்தில் அவர் பேட்டி எடுக்கும்போது கேட்ட கேள்விகள் அநாகரிகமான முறையிலும், அறிவில்லாதவர்கள் கேட்கும் கேள்விகள் போல கேட்டுக் கொண்டிருந்தார்.

ரவீந்தரை பார்த்து, முதல் திருமணம் விரும்பி தானே செய்து கொண்டீர்கள் அது ஏன் கசந்தது?, ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறீர்கள்? என்று அசிங்கப்படுத்தும் அளவுக்கு கேள்வி கேட்டதுடன் மகாலட்சுமியை பார்த்து, என்னமா இப்படி பண்ணிட்டீங்களே? எப்படி ரவீந்தரை பிடித்திருக்கிறது? யாரு உங்களுக்கு பொருத்தம் பார்த்தது.

விவாகரத்துக்கு பிறகு திருமணம் செய்துகொண்டது நெருடலாக இல்லையா?  ஹனிமூன் போகாம எதுக்காக இப்படியெல்லாம் பேட்டி கொடுத்து இருக்கீங்க? என்று பேட்டியை சூடேற்றும் வகையில் கேட்க வேண்டும் என்பதற்காக அத்துமீறிய கேள்விகளை முக்தர் அஹமத் எடுத்து வைத்தார்.

Also Read: அப்ப ஹனிமூன் போகலையா.. வைரலாகும் ரவீந்தர் பதிவு

மேலும் ஒருசில அருவருக்கத் தகுந்த கேள்விகளை கேட்டு அவர்களை அசிங்கப்படுத்தி உள்ளார். இதற்கு இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் கூடிய சீக்கிரம் மக்களிடம் அடி வாங்குவார். மேலும் இவரது முகத்தை மறைத்துக் கொள்ளும் அளவுக்கு விரைவில் அசிங்கப்படுவார் என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆவேசமாக கூறியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் ஆக இருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அளவுக்கு மீறி குறுக்கிடக் கூடாது. அவர்களால் சொன்னால் வேண்டுமானால் அதைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதற்காக பொது வெளியில் செய்தியாளரின் இதுபோன்ற அநாகரீக செயலை ஜேம்ஸ் வசந்தன் ஆவேசத்துடன் தட்டி கேட்டு கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: நாம நெனச்சபடி விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்தர்.. புளித்து விட்டதா காதல் மனைவி?

Trending News