வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜெயிலில் அனுபவித்த கஷ்டத்தை வாய் விட்டு கதறிய ரவீந்தர்.. இரண்டு பெரும் புள்ளிகளுடன் இருந்த சம்பவம்

Ravindar: தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கடந்த மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த வாரம் ஜாமினில் வெளிவந்தார். ஜெயிலில் பட்ட கஷ்டத்தை வாய்விட்டு கதறும் ரவீந்திரனின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

இதில் அவர் இரண்டு பெரும் புள்ளிகளுடன் சேர்ந்து இருந்த சம்பவத்தையும் பற்றி பேசினார். இந்த பக்கம் டிடிஎஃப் வாசன், அந்தப் பக்கம் செந்தில் பாலாஜி. இரண்டு பேரும் ரவீந்தர் ஜெயிலில் இருந்த சமயத்தில் தான் அவர்களும் சிறை தண்டனை அனுபவித்தனர். ரவீந்தர் தற்போது அளித்த பேட்டியில், சிறையில் இருந்தபோது நரக வேதனையை அனுபவித்தேன். பாத்ரூம் போவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. கீழே உட்கார்ந்து எழுந்திருக்க முடியவில்லை.

அதற்காக ரெண்டு மூன்று பேர் உதவி வேணும். ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களை தொந்தரவு பண்ண கூடாதுன்னு, நானே சுவற்றைப் பிடித்துக் கொண்டு தவழ்ந்த தவழ்ந்து போவேன். சிறையில் எனக்கு சிறப்பு வசதி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்னுடைய எதிர் தரப்பு தான். அவர்கள் பார்த்த வேலையால் தான் எனக்கு அது கிடைக்கவில்லை.

அதை போல் செந்தில் பாலாஜி சாருக்கும் பிரியாணி எல்லாம் வெளியிலிருந்து வருதுன்னு பேசுறாங்க. ஆனால் உள்ள அவர் ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கிறார். மத்த கைதிகள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் அவருக்கும் சாப்பாடு. அடுத்ததாக தலைவர் டிடிஎஃப் வாசன் உள்ளே வந்ததும் மொத்த ஜெயிலுமே கதறுது.

அங்கேயும் செம அக்கப்போர் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஜெயில் காவலர்களிடம் என்ன இது இப்படி? அது இப்படி? என ஓவர் அழிச்சாட்டியம். இன்னமும் கையில் கட்டுடன் தான் இருக்கிறார். அவரை தனி செல்லில் வச்சிருக்காங்க. அங்கிருக்கும் போலீஸ்காரர்களை, ‘வா செல்லம், போ செல்லம்’ என்று சொல்லிக்கிட்டு இருக்காரு.

கடுப்பான காவலர்களும் செம டோஸ் விட்டு இருக்கின்றனர். இந்த பையனுக்கு வயசுக்கு ஏத்த மாதிரி பக்குவம் இல்ல. ஒருநாள் அவர் பைக்கை எரிக்க சொல்லிட்டாங்கன்னு தீர்ப்பு வந்துச்சு. உடனே அங்கிருக்கும் கைதிகள் எல்லாம் கோலாகலமாய் கொண்டாடினார்கள். அந்த அளவிற்கு டிடிஎஃப் வாசல் ஜெயிலில் இருப்பவர்களை தெறிச்சு ஓட வைக்கிறார் என்று கூட இருந்த ரவீந்தர் கூறுகிறார்.

Trending News