வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நாம நெனச்சபடி விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்தர்.. புளித்து விட்டதா காதல் மனைவி?

லிப்ரா ப்ரொடக்சன் கம்பெனியை நடத்தி வரும் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், இப்போது சீரியல் நடிகை மகாலட்சுமி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவர்களது திருமண பேச்சு தான். எல்லாரும் நினைத்தபடி ரவீந்தர் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே காதல் மனைவி புளித்து விட்டாரா என கேட்கும் அளவுக்கு விவாகரத்து குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ரவீந்தர் சந்திரசேகரன் சொத்து சுகம், பணம் காசு அதிகமாக இருக்கும் நபர் என்பதால் பணத்திற்காகவே இந்த திருமணத்தை மகாலட்சுமி செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.

உருவ கேலி செய்பவர்களையும் தன்னைப் பற்றி பணத்தாசை பிடித்தவர் என்று பேசுபவர்களையும் மகாலட்சுமி உடனுக்குடன் பதிலளித்து காதல் கணவர் ரவீந்திரன் உடன் வாழ்ந்து காட்டுவதாகவும் சவால் விட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல இப்போது ரவீந்தர் சந்திரசேகரன் சமூக வலைதளங்களில் நேரலையில் உரையாடுகிறார். அப்போது பேசிய ரவீந்தர், ‘மனைவி மகாலட்சுமி நடித்துக்கொண்டிருக்கும்  சன் டிவி சீரியலால் அன்பே வா சீரியலை தினந்தோறும் பார்க்க சொல்லி மனைவி டார்ச்சர் செய்கிறாராம்.

Also Read: நயன்தாரா ஸ்டைலில் தனிவிமானம், தனி தீவு.. தேனிலவுக்கு புறப்பட்ட மகாலட்சுமி-ரவீந்தர்

இந்த சீரியலை மேரேஜ் முன்னாடி பார்க்க சொல்லியிருந்தா, அப்பவே டைவர்ஸ் பண்ணி இருப்பேன்’ என்று ரவீந்தர் சொல்லியிருக்கிறார். மேலும் திருமணத்திற்குப் பிறகு நேரலையில் ரசிகர்களுடன் பேசுவதற்கு புது பொண்ணுனான மகாலட்சுமி வெட்கப்படுவதால் தான் வரவில்லை என்றும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் ரவீந்தர் பேசியிருந்தார். இதற்கு நெட்டிசன்கள் திருமணத்திற்கு பிறகுதான் டைவர்ஸ் பண்ண முடியும். திருமணத்திற்கு முன்னாடி விவாகரத்து எப்படி வாங்க முடியும் என்று ரவீந்திரனை கிண்டல் செய்கின்றனர்.

Also Read: மகாலட்சுமி ஜோடியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பிரபலம்.. எல்லாரு மனசுலயும் இதான் இருந்துச்சு

‘ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்’ இன்னும் சில நாட்களில் இவர்களது காதல் எப்படிப்பட்டது என்பது தெரிந்துவிடும் என்று பலரும் ரவீந்தர்-மகாலட்சுமி திருமணத்தைக் குறித்து பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத புதுமண தம்பதிகளான ரவீந்தர்-மகாலட்சுமி ஒரு விமானத்தின் முன்பு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, தனி விமானத்தில் தனித் தீவுக்கு தேனிலவு செல்கிறார்கள் என எழுதி விடாதீர்கள். திருச்சி குலதெய்வத்திற்கு சென்றதாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Also Read: மகாலக்ஷ்மியின் சம்பளம் இவ்வளவா! பிளான் போட்டு திருமணம் செய்த ரவீந்தர்

Trending News