வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ராயன் ட்ரெய்லரில் ரஜினி, சிம்பு பட வாடை அடிக்குதே.. அடங்காத அசுரன் தனுஷின் கேரக்டர் இது தான்

Dhanush: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

தனுஷின் ஐம்பதாவது படம் என்ற சிறப்புடன் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியானது. அதில் அடங்காத அசுரனாக தனுஷின் தோற்றமும் கதாபாத்திரமும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா உரிமை 5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மேலும் கேரளா உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் பெற்றுள்ளது.

கர்நாடகா உரிமை ஏவி மீடியா பெற்றுள்ள நிலையில் ஓவர்சீஸ் உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது. இப்படி பிரீ பிசினஸ் ஜோராக நடந்துள்ள நிலையில் பிரமோஷன் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

ராயன் படத்தில் தனுஷின் கேரக்டர் இதுதான்

இந்த சூழலில் ராயன் ரஜினியின் காலா சிம்புவின் பத்து தல படங்களின் சாயலில் இருக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது காலா படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ராவணன் போன்று அமைக்கப்பட்டிருக்கும்.

ட்ரைலரில் கூட இது காட்டப்பட்ட நிலையில் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. அதே போல் பத்து தல படத்தில் சிம்புவின் கதாபாத்திர பெயர் அதுதான். அந்த வகையில் ராயன் படத்தில் தனுஷ் ராவணனை பிரதிபலிக்கும் விதமாகத்தான் தன் கேரக்டரை உருவாக்கியுள்ளார்.

அதேபோல் இராவணனின் தம்பிகள் போன்று காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் கேரக்டர்கள் இருக்கும். மேலும் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் தான் துஷாரா விஜயன் நடித்துள்ளதாக சலசலக்கப்பட்டு வருகிறது.

அடங்காத அசுரன் பாடலில் கூட பத்து தலை ராவணன் சித்திரம் காட்டப்பட்டிருக்கும். இப்படி பல விஷயங்கள் தனுஷின் கேரக்டர் ராவணன் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. காலா படத்தை தனுஷ் தயாரித்திருந்த நிலையில் ராயன் படம் அதோடு ஒத்துப் போவது சிறு முணுமுணுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி பட சாயலில் உருவாகி இருக்கும் ராயன்

Trending News