மும்பை அணியின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. கடப்பாறை அணியை கட்டம் கட்டிய ஆர்சிபி

mumbai-rcb
mumbai-rcb

மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

ஆரம்பத்தில் மும்பை அணி அதிரடி காட்டினாலும் பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பெங்களூர் அணி.  15 பந்துகளில் 19 ரன்களை எடுத்த ரோஹித் சர்மா ரன் அவுட் மூலம் வெளியேறினார்.

அதன்பின் மும்பை அணி சுதாரித்து அதிரடி காட்டியது, மும்பையின் சூரியகுமார் யாதவ், கிறிஸ் லின் இருவரும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

முதல் 10 ஓவர்களுக்கு 88 ரன்களை கடந்தது. அதன் பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மிடில் ஆர்டரில் இறங்கிய ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கிரன் பொல்லார்டு என அனைவரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

RCBwin-Cinemapettai.jpg
RCBwin-Cinemapettai.jpg

200 ரன்களை எளிதாக கடக்கும் நிலையிலிருந்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தனது முதல் இன்னிங்சை முடித்தது. இதற்கு முழு காரணம் பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

கடப்பாறை பேட்டிங் வரிசையை கொண்டுள்ள மும்பை அணியை எப்படி பவுலிங்கில் சமாளிப்பது என்பதை தெளிவாகத் திட்டமிட்டு விளையாடி வென்றுள்ளது.  அந்த அணியின் ஹர்ஷல் பட்டேல் அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Harshal-Patel-Cinemapettai.jpg
Harshal-Patel-Cinemapettai.jpg
Advertisement Amazon Prime Banner