சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

முக்கிய வீரரின் வருகை, அணிக்குள் பல மாற்றங்களை செய்யும் ஆர்சிபி.. வெற்றி யாருக்கு.?

ஐபிஎல் 2021, 6-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளது. இதற்காக இவ்விருஅணிகளுமே தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக  இருக்காத காரணத்தினால் இரு அணி வீரர்களும் ப்ளேயர்சை தேர்வு செய்வதில் குழப்பத்தில் உள்ளனர். இன்று நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிக்கு எதிராக முக்கிய வீரர் ஆர்சிபி அணிக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அணி மும்பை அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரராக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலியுடன் களமிறங்கினார். ஆனால் அணிக்கு பேட்டிங்கில் தொடக்கம் சரியாக அமையவில்லை. புதிய ஓப்பனிங் வீரராக இறங்கிய வாசிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்நிலையில் 2வது போட்டியில் ஓப்பனிங் வீரர் தேவ்தத் படிக்கல் அணிக்கு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய தேவ்தத் படிக்கல் இந்தாண்டு தொடக்கத்திலேயே கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டார்.

அவர் பூரண குணமடைந்த போதும் முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த சூழலில் அவர் 2வது போட்டியில் களம் காணவுள்ளார். இரு அணி வீரர்களுமே அணியின் பேட்டிங்கை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Devdat-Padikal.jpg
Devdat-Padikal.jpg

ஆகையால் இன்று நடைபெறும் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு விருந்தாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Trending News