சினிமாவில் திறமையும், அதிர்ஷ்டமும் ஒரு சேர இருந்தால் மட்டுமே தொடர்ந்து ஒரு நடிகனால் பயணிக்க முடியும். அப்படி ஏதாவது ஒன்று கைவிட்டாலும் கூட அவரது கேரியர் கிளோஸ், அப்படி ஏகப்பட்ட நடிகர்கள் உதாரணத்திற்கு ஷாம், அருள்நிதி, விதார்த், அட்டகத்தி தினேஷ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்பொழுது பழைய ஹீரோ ஒருவர் ரீ என்ட்ரியில் பக்கா மாஸ் காட்டியும் அடுத்தடுத்து அவருக்கு படங்கள் வரவில்லை. தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருகிறார். இவர்தான் 80களில் பல இளைஞிகளின் கனவு கண்ணன். அதே அழகும், திறமை குறையாமல் இன்றுவரை மினுக்கோடுதான் இருக்கிறார்.
அந்தகன், கோட் என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் நடித்தாலும் அவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதில் விஜய் உடன் கோட் படத்தில் நண்பர் கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் கவர்ந்தார்
இன்று அஜித் விஜய் எப்படியோ, 80களில் டாப் ஸ்டார் பிரசாந்தும் அப்படி இருந்தவர். பெரும்பாலும் அஜித் போல் எந்த ஒரு மீடியாவிலும் தலைக்ககாட்ட மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என எப்பொழுதுமே தனக்கென ஒரு வட்டத்தை அமைத்து இருப்பவர் பிரசாந்த். அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சில பிரச்சினைகள் இருக்கிறது போல்.
சமீபத்தில் சுந்தர் சி கொடுத்த ஒரு பார்ட்டியில் தலை காட்டியுள்ளார் பிரசாந்த். இவர்கள் கூட்டணியில் வின்னர் 2 படம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்பொழுதுமே இவர்கள் காம்பினேஷன் தூள் பறக்கும். அதற்கு ஒரு உதாரணம் வின்னர் மற்றும் லண்டன் படங்கள். வக்கீல் வெடிமுத்து, கைப்பிள்ளை இந்த இரண்டு படங்களிலுமே பிரசாந்த் மற்றும் வடிவேலு கூட்டணி சக்க போடு போட்டிருக்கும்.