புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஆகஸ்ட் 15ஆம் தேதி மோதிக் கொள்ளும் 2 படங்கள்.. விக்ரமுடன் போட்டி போடும் ரீ என்ட்ரி ஹீரோ

Vikram: கோலிவுட்டின் இந்த வருட முதல் பாதி ரொம்பவே டல்லாக சென்றது. ஆனால் மே மாதத்திற்கு பிறகு அடுத்தடுத்த ஹிட் படங்கள் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதன்படி அரண்மனை 4, கருடன், மகாராஜா என பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 பலத்த அடி வாங்கியுள்ளது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தான். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களை அவர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அந்த வகையில் தங்கலான், கோட், கங்குவா, வேட்டையன், அமரன், விடாமுயற்சி என டாப் ஹீரோக்களின் படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. இதில் விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்கலான் ஆகஸ்ட் 15ஆம் தேதியை குறிவைத்து வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் வேற லெவல் ரெஸ்பான்சை பெற்றது. அதை தொடர்ந்து வெளியான பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வழக்கம் போல நடிப்பு அசுரன் விக்ரமின் தோற்றமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்ரமுடன் மோதும் பிரசாந்த்

மேலும் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரி குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே வேறு எந்த படங்களும் தங்கலானுடன் மோதவில்லை. ஆனால் ரீ என்ட்ரி ஹீரோ ஒருவர் துணிந்து போட்டி போட தயாராகி விட்டார்.

ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக பிஸியாக நடித்து வந்த பிரசாந்த் தற்போது விஜய்யின் கோட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இவருடைய அந்தகன் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ஆர்வத்தை தூண்டி இருந்தது. அதில் கண்பார்வையற்றவராக வரும் பிரசாந்த் அடுத்தடுத்த கொலைகளை செய்வது போல் பயங்கர திரில்லிங்காக ட்ரைலர் இருந்தது.

ஆனால் அதில் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்றுதான் அறிவித்திருந்தனர். தற்போது கிடைத்த தகவலின்படி அந்தகன் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த இரண்டு ஹீரோக்களும் ஒரே நாளில் போட்டி போடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி போட்டி போடும் 2 ஹீரோக்கள்

Trending News