திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரீ என்ட்ரியாகும் விஜய் பட நடிகை.. ஜோதிகா போல் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டிய கணவர்

சினிமாவில் ஹீரோயின்கள் ஒரு காலம் வரை தான் கொடிகட்டி பறக்க முடியும். அதுவும் அந்த நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க தான் கேட்பார்கள். ஆனால் ஒரு சிலர் இதில் விதிவிலக்காக உள்ளனர்.

சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகள் தற்போதும் மார்க்கெட்டை இழக்காமல் உள்ளனர். மேலும் சில நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சிறிது பிரேக் எடுத்து விட்ட மீண்டும் நடிக்க வருகிறார்கள். அந்த வகையில் சூர்யா ஜோதிகாவுக்கு பச்சைக்கொடி காட்டியதால் மீண்டும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Also Read :நடிப்பின் ராட்சசி என ஜோதிகா நிரூபித்த 8 படங்கள்.. வாழ்நாளில் மறக்க முடியாத சந்திரமுகி

இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த நடிகை தற்போது கணவர் ஒத்துக் கொண்டதால் மீண்டும் சினிமாவில் களமிறங்க உள்ளாராம். விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அசின். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

விஜய் உடன் போக்கிரி, சிவகாசி, காவலன் போன்ற படங்களில் அசின்  நடித்திருந்தார். மேலும் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் அசினுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வந்த அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also Read :அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்பம், குழந்தையை பார்த்துக் கொண்டிருந்ததால் அசின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது திரும்பவும் சினிமாவில் நடிக்க வருகிறாராம். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இதனால் விட்ட மார்க்கெட்டை பிடித்து தமிழ், ஹிந்தி சினிமாவில் மீண்டும் ஓரு ரவுண்டுக்கு ரெடி ஆகிறார் அசின். மேலும் மிக விரைவில் அசினை வெள்ளித்திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read :மகளுக்கு நடனம் கற்று கொடுக்கும் அசின்.. போட்டோவை பார்த்து அய்யோடா என கொஞ்சும் நெட்டிசன்கள்

Trending News