செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சம்பளமே இல்லாமல் நடிக்க ரெடி.. விஜய்க்காக விட்டுக் கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தயாராகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை காண அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்கு எனக்கு சம்பளமே வேண்டாம் என்று பிரபல நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வரும் ஆர் பி சவுத்ரி விஜய்யை வைத்து ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

Also read:வாரிசு நடிகரின் வாழ்க்கையை திசை திருப்பிய விஜய்.. ஆனா இவரு அஜித்தோட தீவிர ரசிகர் ஆச்சே

அவருடைய மகன் ஜீவா விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதிலிருந்து அவருக்கும் விஜய்க்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது. அந்த வகையில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் நூறாவது திரைப்படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று ஆர் பி சவுத்ரி ஆசைப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் சூப்பர் குட் பிலிம்சின் 100வது திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஜீவா அதிகாரப்பூர்வமாக இப்போது அறிவித்துள்ளார்.

Also read:பட வாய்ப்பு இல்லாததால் புது ரூட்டை பிடித்த ஜீவா.. அர்ஜுனுக்குகே டஃப் கொடுப்பார் போல!

மேலும் விஜய் அண்ணா நடிக்கும் எங்கள் நிறுவனத்தின் 100வது திரைப்படத்தில் நானும் நடிப்பேன் என்று என் அப்பாவிடம் பிடிவாதம் பிடித்தேன். அது மட்டுமல்லாமல் எனக்கு நீங்கள் சம்பளம் கூட தர வேண்டாம் விஜய் அண்ணாவுடன் சேர்ந்து நடித்தால் மட்டும் போதும் என்று கூறியதாக ஜீவா தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 100வது திரைப்படத்தில் விஜய் மற்றும் ஜீவா இருவரும் இணைந்து நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய் அதன் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:விஜயுடன் செல்பி புகைப்படம் எடுத்த ராஷ்மிகா.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பான வம்சி

Trending News