ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மேட்ச் பாக்க ரெடியா? 2 வது ரவுண்டுக்கு தயாரான ஆர்யாவின் வைரல் போஸ்டர்

ஆர்யா தமிழ் சினிமாவில் பல காலமாக இருந்து வந்தாலும் தனக்கான இடத்தை பிடிக்க தற்போது வரை போராடி வருகிறார். சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. இதனால் மீண்டும் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று ஆர்யா முடிவுக்கு வந்துள்ளார்.

ஆர்யாவின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதற்காக தற்போது அவர் ஆயத்தமாகி வருகிறாராம். அதுவும் ஆர்யாவின் நடிப்பு திறமைக்கு மேலும் வலு சேர்த்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனராம்.

Also Read : அரச்ச மாவையே அரச்ச கதையில் 5 நகைச்சுவை படங்கள்.. ஆர்யா, ஜீவாக்கு செட்டானது, கொஞ்சம் கூட செட்டாகாத விஷால்

அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஜான் கோக்கன், துஷாரா விஜயன், பசுபதி மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இதுவே சார்பட்டை பரம்பரை படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது. ஆனால் அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

Also Read : அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள்.. 17 வயது வித்தியாசத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா சாயிஷா

இதை ஆர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இரண்டாம் ரவுண்டுக்கு தயார் என்று வெளியாகி உள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாக போஸ்டரை வெளியிட்டு உள்ளார். இதனால் மீண்டும் குத்து சண்டை போட்டிக்கு ஆர்யா தயாராகி வருகிறார். இப்போது இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. மேலும் இந்த முறை சார்பட்டா பரம்பரை 2 படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

arya-sarapatta-parambarai

Also Read : பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை ட்ரெய்லர்.. இங்கேயும் பயமுறுத்தும் ஆர்யா

Trending News