வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சினிமாவில் கிசுகிசுக்கப்பட்ட பிரபலங்கள்.. ஆனா நிஜ வாழ்க்கையில் சத்தமில்லாமல் சாதித்த 5 நட்சத்திர தம்பதிகள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜோடிகள் இணைந்து நடித்தாலும் ஒரு சில ஜோடிகளே ரசிகர்களால் ஏற்று கொள்ளப்பட்டனர். அத்தகைய சில ஜோடிகள் நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் சில ஜோடிகளை பற்றி உங்களுக்காக. திருமணத்திற்கு முன்னதாக சினிமா தான் உலகம் என்று இருந்த நட்சத்திர தம்பதிகள் கிசுகிசுக்கப்படுவது வாடிக்கைத்தான்.

அஜித் ஷாலினி: ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்த நடிகை ஷாலினி நடிகர் அஜித்துடன் இணைந்து அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர்கள் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

சூர்யா ஜோதிகா: பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில்  இணைந்து நடித்தவர்கள் சூர்யா ஜோதிகா. இந்த படத்தினை தொடர்ந்து இவர்கள் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற ஏழு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

பிரசன்னா சினேகா: பைவ் ஸ்டார் திரை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவை 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்தனர் .இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

பாக்யராஜ் பூர்ணிமா: இயக்குனர் பாக்யராஜ் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடிகை பூர்ணிமா உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர்கள் காதல் வயப்பட்டு 1984ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகர் பாக்யராஜ் அவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் அவருடைய முதல் மனைவியான நடிகை பிரவீணா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜ் பூர்ணிமா தம்பதிகளுக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். இவர்களுடைய மகனான நடிகர் சாந்தனு தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரஞ்சித் பிரியாராமன்: நேசம் புதுசு என்ற திரைப்படத்தில் ரஞ்சித் மற்றும் பிரியாராமன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் பொழுது இவர்கள் காதலித்தனர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சில காரணங்களால் விவாகரத்தும் பெற்றனர். தற்பொழுது இந்த ஆண்டு இவர்களது திருமண நாளில் இந்த ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் தற்பொழுது நடித்து வருகின்றனர்.

Trending News