சினிமாவில் வில்லனாக இருந்து நிஜவாழ்க்கையில் கெத்தாக வாழ்ந்த 3 முக்கிய பிரபலங்களை பார்க்கலாம். கெத்து என்று கூறுவது நாணயம், ஒழுக்கம் நிறைந்த நடிகர்களாக சக நடிகர்களை மதித்து புகழ் பெற்றவர்கள் என்று கூறலாம்.
கே பாலாஜி: ரஜினியின் பில்லா படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி. போலீஸ் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து பிரபலமானவர் என்றே கூறலாம். இவர் பல படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் தன்னை சார்ந்து இருப்பவர்களை மதித்து நல்ல மனிதனாக பெயர் பெற்றவர்.
செந்தாமரை: குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிக தத்ரூபமாக நடிப்பவர் செந்தாமரை. கிராமத்து படங்கள் என்றாலே இவர் இல்லாமல் சுவாரஸ்யம் இருக்காது என்றே கூறலாம். ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் கெத்தை விட்டுக் கொடுக்க மாட்டாராம்.
அதாவது சாப்பாடு இல்லை என்றாலும் புகை பிடித்துக் கொண்டே களித்து விடுவாராம் செந்தாமரை. இவரும் வில்லன் கதாபாத்திரம் மூலம் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் பல உதவிகளை செய்து தன்னை சார்ந்து இருப்பவர்களிடம் புகழ் பெற்றுள்ளார்.
எம்.என்.நம்பியார்: சிவாஜி, எம்ஜிஆர் காலங்களில் வில்லனாக தடம் பதித்தவர் எம் என் நம்பியார். சினிமாவில் மட்டும் தான் வில்லன் நிஜவாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்தவர் என்றே கூறலாம். மெல்ல மெல்ல தனது வில்லன் கதாபாத்திரத்தை விட்டுவிட்டு காமெடியனாகவும் நடித்துள்ளார்.
அவரைப் பற்றி தெரியாத பல சுவாரசியமான சம்பவங்கள் உள்ளது கடைசிவரை சைவ உணவு மட்டுமே எடுத்துள்ளார். எம் என் நம்பியார் எம்ஜிஆருடன் நெருங்கிய நண்பராக சினிமா துறையில் வலம் வந்தவர். கடைசிவரை தனது ஒழுக்கம், நாணயம் என்று வாழ்ந்து கடைப்பிடித்து மறைந்தவர்.