வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உண்மையான பெயரை மாற்றிக் கொண்ட நடிகைகள்.. இப்படிலாம் கூட பேரு வைப்பாங்களா

சினிமாவில் உண்மையான பெயரை மாற்றிக் கொள்வது வாடிக்கைதான், அந்த வகையில் பிரபலமான நடிகைகள் தங்களது உண்மையான பெயரை மாற்றி உள்ளதை தற்போது பார்க்கலாம்.

சௌந்தர்யா, படையப்பா படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதற்கு முன்னதாக வெளிவந்த அம்மன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமாக பேசப்பட்டது. 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்துவிட்டார், இவரது உண்மையான பெயர் சௌம்யா சத்யநாராயணா.

ஸ்ரீதேவி:

90களில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி, இவருடன் முன்னணி நடிகர்கள் ஜோடி போடுவதற்கு போட்டி போட்ட காலங்களும் உண்டு. அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக கைகொடுத்தது. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவரின் உண்மையான பெயர் ஸ்ரீ அம்மா யங்கி ஐயப்பன்.

ரோஜா: தமிழ் சினிமாவில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, வீரா போன்ற பிரமாண்ட வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவரது உண்மையான பெயர் ஸ்ரீ லதா.

நயன்தாரா:

தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவரின் உண்மையான பெயர் ‘டயானா மரியம் குரியன்’. இவரின் மூக்குத்தி அம்மன் படம் விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

சினேகா:

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுடன் சேர்ந்து பட்டையை கிளப்பி இருப்பார். இவர் சினிமாவிற்கு வருவதற்க்காக தனது பெயரை மாற்றிக் கொண்டாராம், உண்மையான பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு.

ரம்பா:

தமிழ் சினிமாவில் தொடைக்கு பெயர் போனவர் ரம்பா, ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு சொக்க வைத்தவர் என்றே கூறலாம். இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி.

அனுஷ்கா:

தெலுங்கு, தமிழ் படங்களில் பிரபலமானவர் அனுஷ்கா, இவரை தென்னிந்தியா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். என்னை அறிந்தால், தெய்வத்திருமகள் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. பிரம்மாண்டமான பாகுபலியில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார். இவரது உண்மையான பெயர் ஸ்வீட்டி செட்டி.

கியாரா அத்வானி:

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கியாரா அத்வானி, இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னதாக சல்மான்கான் கூறியபடி ஆலியா அத்வானி என்ற பெயரை கியாரா அத்வானி என்று மாற்றிக் கொண்டாராம். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றவர். தற்போது லட்சுமி பாம், சாஷா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் உண்மையான ஜாதகத்தையே மாற்றும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நிலையில் நடிகை நடிகர்கள் தங்களது பெயர்களை மாற்றுவது ஜாதகத்தின் அடிப்படையில் கூட இருக்கலாம்.

Trending News