தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இளம்பெண்களின் ரசிகர் கூட்டம் விஜய்க்கு அதிகமானதே காதலுக்கு மரியாதை படத்தின் மூலம்தான்.
மலையாள ரீமேக் படமாக இருந்தாலும் தமிழில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. விஜய் மற்றும் ஷாலினி ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. போதாக்குறைக்கு இளையராஜாவின் இசை வேறு.

ஃபாசில் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஆனால் முதன்முறையாக காதலுக்கு மரியாதை பட வாய்ப்பு அந்த காலத்தில் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்த அப்பாஸ்க்கு தான் கிடைத்ததாம்.
ஆனால் அப்பாஸ் மேனேஜர் செய்த குளறுபடியால் அந்த பட வாய்ப்பு நேரடியாக தளபதி விஜய்க்கு சென்றதாம். அப்போதுதான் விஜய்க்கு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூறலாம். அந்த வருடத்தில் வந்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வந்தன.

மேலும் காதலுக்கு மரியாதை படம் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த பிறகு இந்தியிலும் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை விஜய்க்கு பதிலாக அப்பாஸ் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்திருந்தால் இன்று பாத்ரூம் கழுவும் விளம்பரத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது.
கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த நாயகர்களில் ஒருவராக இருந்திருப்பார் என கூறுகின்றனர். இன்றளவும் காதலுக்கு மரியாதை படத்தை பார்க்கும் போது இந்தப் படத்தைப் போய் மிஸ் செய்து விட்டோமே என குமுறி குமுறி அழுவாராம் அப்பாஸ்.