அட இதுதான் சங்கதியா.? கேப்டன் மில்லருக்கு டாட்டா போட்டு மும்பையில் வட்டமிடும் தனுஷ்

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி போன்ற தொடர் வெற்றிகளுக்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பானது தென்காசி மற்றும் மதுரை பகுதியைச் சுற்றி நடைபெற்று வருகிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பிலிருந்து திடீரென மும்பை சென்று இருக்கிறார் தனுஷ்.

தாடி மற்றும் மீசையுடன் மும்பை விமான நிலையத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இந்த கெட்டப் தான் கேப்டன் மில்லர் படத்தின் கெட்டப்பாக இருக்க கூடும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் ஏன் மும்பை சென்றார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருந்தது.

Also Read:தான் யார் என்பதை மறந்து தனுஷுக்கு சோப் போடும் பாரதிராஜா.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்!

நடிகர் தனுஷின் மும்பை விசிட் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் 2, D 50 போன்ற படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பாலிவுட்டில் ஒரு படம் பண்ண இருக்கிறார். பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் மூன்றாவது முறையாக இவர் கூட்டணி அமைக்க இருப்பது தான் இந்த விசிட்டிற்கு காரணம்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த தனுஷை ராஞ்சனா என்னும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றவர் தான் இயக்குனர் ஆனந்த் எல் ராய். இந்த படம் தமிழிலும் அம்பிகாபதி என்னும் பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் ஆகியோரது கூட்டணியில் அத்ரங்கி ரே திரைப்படத்தை மீண்டும் இயக்கி வெற்றி கண்டார் ஆனந்த் எல் ராய்.

Also Read:குடும்பத்தோடு அவமானப்பட்ட தனுஷ்.. ராஜதந்திரத்துடன் பழிக்கு பழி வாங்கிய அசுரன்

அடுத்தடுத்து இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் இணைந்து ரொமாண்டிக் திரைப்படத்தை கொடுத்த தனுஷ் தற்போது முழுக்க ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோ சூட்டிற்காகத்தான் தனுஷ் தற்போது மும்பை சென்றிருக்கிறார். எனவே இந்த படத்தை பற்றி விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் மற்றும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக லால் சலாம் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்திருக்கும் நேரத்தில் தனுஷும் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க தயாராகி வருவது அவர் ஏதோ ஐஸ்வர்யாவுக்கு ஏட்டிக்கு போட்டியாக களம் இறங்குவது போல் தான் தெரிகிறது.

Also Read:ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்