ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

இனி விஜய் டிவி பக்கமே போக மாட்டேன்.. பிரபல தொகுப்பாளினி அதிரடி முடிவு

விஜய் டிவியில் பிரபலமான இரண்டு தொகுப்பாளினிகள் என்றால் அது டிடி மற்றும் பாவனா தான். சமீபகாலமாக விஜய் டிவியில் தலைகாட்டாமல் இருந்து வந்த டிடி சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை பேட்டி எடுத்திருந்தார். ஆனால் பாவனாவை விஜய் டிவியில் பார்க்கவே முடியவில்லை.

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற பல நிகழ்ச்சிகளை மாகாப உடன் இணைந்து பாவனா தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரை விஜய் டிவியில் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பார்க்கவே முடியவில்லை.

பட நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் மட்டுமே பாவனாவை பார்க்க முடிந்தது. ஆம் பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அப்படி என்றால் இனி விஜய் டிவியில் உங்களை பார்க்க முடியாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த பாவனா, “விஜய் டிவி தற்போது காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். எனக்கு காமெடி சுத்தமாக வராது. அதனால் இனி நான் விஜய் டிவி பக்கம் போகமாட்டேன். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய பாவனாவிடம் உங்கள் பேவரைட் சேனல் விஜய் டிவியா? ஸ்டார் ஸ்போர்ட்ஸா? என கேள்வி எழுப்பி இருந்தார்கள் இதற்கு பதிலளித்த பாவனா, “விஜய் டிவி தான் எனக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் டிவி தான் மக்கள் கிட்ட என்னை கொண்டு சேர்த்தார்கள். ஆனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தான் பேவரைட்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாவனா பல ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய வருகிறாராம். ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் சம்பளமாக பெருகிறாராம் பாவனா. விஜய் டிவியை விட இதில் பல மடங்கு சம்பளம் அதிகம் என்பதால் தான் பாவனா விஜய் டிவியில் இருந்து விலகி விட்டாராம். இதுதான் உண்மை காரணம் என கூறப்படுகிறது.

Trending News