சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சூர்யாவுக்கு கொரானா வரக் காரணம் இதுதான்.. நல்லது செய்யப்போய் நடந்த சோகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இருந்தாலும் கொரானா ஏற்பட்டவுடன் கூறாமல் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கும் போது பாதிக்கப்பட்டதை சூர்யா தெரிவித்துள்ளார்.

மற்ற முன்னணி நடிகர்களின் நடவடிக்கைகளை காட்டிலும் சமீபகாலமாக சூர்யா அடிக்கடி வெளியில் தலைகாட்டி வந்தார். சூரரைப் போற்று பிரச்சனை, புதிய படங்களின் பூஜை என செம பிஸியாக வலம் வந்தார்.

இருந்தாலும் அப்போதெல்லாம் ஏற்படாத கொரானா தொற்று இப்போது எப்படி சூர்யாவுக்கு வந்தது என அனைவரும் யோசிக்கலாம். அதற்கு காரணம் இருக்கிறதாம். சூர்யா உயிருக்குயிரான ரசிகர்களுக்கு நல்லது செய்யப் போய் இப்படி ஆகி விட்டது என்கிறார்கள் சூர்யாவின் வட்டாரங்கள்.

சூர்யா சமீபத்தில் தன்னுடைய உயிருக்குயிரான ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரடியாக சென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்போது தன்னுடைய ரசிகர்களுடன் கைகுலுக்குவது, போட்டோ எடுப்பதும் என வழக்கம் போல் இருந்தார் சூர்யா.

ஆனால் அதன் பிறகுதான் எதிர்பாராத விதமாக சூர்யாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் தன்னுடைய ரசிகர்கள் யாருக்காவது கொரானா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என பயந்து கொண்டிருக்கிறாராம் சூர்யா.

suriya-affected-by-corana
suriya-affected-by-corana

இதனால் தன்னுடைய ரசிகரின் திருமணத்திற்கு வந்த அனைத்து ரசிகர்களையும் கொரானா பரிசோதனை செய்யும்படி சூர்யா தன்னுடைய வட்டாரங்களிலிருந்து அவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending News