திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

செல்வராகவன், சோனியா அகர்வாலை பிரிந்த ரகசியம் .. கடைசியில் உண்மையை சொன்ன சோனியா.

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி என வித்யாசமான காதலை திரைப்படங்களில் கொண்டு வந்தவர் இயக்குனர் செல்வராகவன். அதன்பிறகு புதுப்பேட்டை,  மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என பல படங்களை இயக்கியுள்ளார்.

செல்வராகவன் தற்போது படங்களில் நடிக்கவும் தொடங்கியுள்ளார். சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார். செல்வராகவன் தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் மாடலிங்கில் கொடிகட்டிப் பறந்த சோனியா அகர்வாலை தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தினார்.

சோனியா அகர்வால் இப்படத்திற்கு பிறகு கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுப் பயலே என பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். சோனியா, தன்னை தமிழில் அறிமுகமாகிய செய்த இயக்குனர் செல்வராகவனை காதலித்து 2006 இல் திருமணம் செய்து கொண்டார்.

Sonia-Cinemapettai.jpg
Sonia-Cinemapettai.jpg

இவர்கள் இருவரும் 2010 வரை சேர்ந்து வாழ்ந்தார்கள். பின்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர். சோனியாவிற்க்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இருந்ததால் செல்வராகவன், இவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

செல்வராகவன் சோனியா அகர்வாலை பிரிந்த பிறகு கீதாஞ்சலி என்பவரை 2011 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சோனியா அகர்வால், தன்னுடைய குரு செல்வராகவன் என்றும் ஹிந்தி, இங்கிலீஷ் மட்டும் தெரிந்த எனக்கு தமிழில் ஒரு சிறந்த நடிகையாக மாற்றியவர். எனக்கு நடிப்பு என்பதை சொல்லி கொடுத்தவரும் செல்வராகவன். இன்றளவும் திவ்யா, அனிதா போன்ற கதாபாத்திரம் 15 ஆண்டுகளுக்கு பின்னரும் பேசப்பட்டு வருவதற்கு செல்வராகவன் ஒரு காரணமாக இருக்கிறார் என்று அவருக்கு நன்றி கூறினார்.

Trending News