திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்துக்கு ஒத்து வராத அந்த கண்டிஷன்கள்.. இதுவரை ஷங்கருடன் ஒத்துப்போகாத ஏகே

பிரம்மாண்ட இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் ஷங்கர், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தமிழ் சினிமாவுக்கு நிறைய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்ததில் ஷங்கருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பிரம்மாண்டமாகவும், கமர்சியலாகவும் இவர் படம் பண்ணினாலும் ரொம்பவும் தைரியமாக தன்னுடைய படங்களில் சமூகக் கருத்துக்களையும், அரசியல் குறைகளையும் சொல்லக்கூடியவர்.

முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய் போன்றோர் ஷங்கரின் இயக்கத்தில் நடித்து விட்டனர். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுக்கு இவருடைய இயக்கத்தில் ஒரு படம் பண்ணி விட வேண்டும் என்பது ஒரு மிகப்பெரிய கனவாகவே இருக்கிறது. ஆனால் இவரும் நடிகர் அஜித்குமாரும் இன்றுவரை ஒரு படத்தில் கூட இணையவில்லை. இவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் அது இன்று வரை கைக்கூடவில்லை.

Also Read:மோசமான வேலை பார்த்த ஷாலினி.. நொந்து போய் மன்னிப்பு கேட்க சொன்ன அஜித்

ஆனால் ஷங்கருடன் அஜித் படம் பண்ணாததற்கு எந்த ஒரு வகையிலும் அவர் காரணம் இல்லை. முழுக்க முழுக்க நடிகர் அஜித் தான் காரணம். அஜித்தை பொறுத்த வரைக்கும் அவருக்கு தன்னுடைய சக கலைஞர்களுடன் ஒத்துப் போகவில்லை என்றால் அதன் பிறகு அவர்களுடன் இணைய மாட்டார். இது நிறைய நடிகர்கள் தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். அதே போன்று தான் ஷங்கருடனும் அஜித்துக்கு ஒத்துப் போகவில்லை.

இயக்குனர் ஷங்கரை பொருத்தவரைக்கும் ரொம்பவும் கூலான ஆளாக தெரிந்தாலும், பட வேலைகள் என்று வந்துவிட்டால் அதிக கண்டிப்புடன் இருப்பாராம். அஜித் குமார் அவர் நடிக்கும் படங்களிலேயே ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு தான் நடிப்பார். அப்படி இருக்கும் பொழுது ஷங்கருடன் படம் பண்ண வேண்டும் என்றால் அவருக்கும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் இருக்கிறதாம். இதுதான் இருவருக்கும் ஒத்துப் போகாமல் போனதற்கு காரணம்.

Also Read:வித்தியாசமாக ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்திய அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரொமான்ஸ்

ஷங்கர் கதை சொல்லும் பொழுதே இத்தனை நாள் கால்ஷுட்டுகள் வேண்டும் என்று சொல்லிவிடுவாராம். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பல நேரங்களில் கொடுத்த கால்ஷுட்டை விட அதிக நாட்கள் படப்பிடிப்பை நீட்டித்து விடுவாராம். அதேபோல் அவருடைய படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டால் படம் முடியும் வரைக்கும் வேறு எந்த படங்களிலும் நடிக்க கூடாது என்பதும் முக்கியமான கண்டிஷனாம்.

அதனால் தான் நடிகர் அஜித்குமார் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை ஷங்கருடன் இணையவே இல்லையாம். பல டாப் ஹீரோக்களை இயக்கிய ஷங்கருக்கு அஜித்துடனும் இணைய வேண்டும் என்பது கனவாக தான் இருக்கும். ஆனால் அஜித்தான் இதுவரை அதற்கு ஒத்துப் போகாமல் இருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு கதைகள் அஜித்திடம் சொல்லப்பட்டு அதை அவர் நிராகரித்தும் இருக்கிறார்.

Also Read:அஜித் ரொம்ப ஆசைப்பட்டு செய்த ஒரே விஷயம்.. கோடி கணக்கில் பணம் வந்ததால் இழுத்து மூடிவிட்டார்

Trending News