புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாரிசு விழாவை புறக்கணித்த சங்கீதா, கிளம்பிய விவாகரத்து சர்ச்சை.. வெளிவந்த உண்மை காரணம்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒட்டுமொத்த திரையுலகமும் உன்னிப்பாக கவனித்த அந்த நிகழ்ச்சி சில பல சர்ச்சைகளுக்கும் உள்ளானது. அதாவது விஜய் ரொம்பவும் சிம்பிளாக வந்திருந்தது பலரையும் வியப்படைய செய்தது. அது குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர், அம்மா சோபா ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்கு சரியான உறவு இல்லை என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்திருந்த அவர்களை விஜய் எப்படி வரவேற்பார் என பலரும் ஆர்வத்துடன் கவனித்தனர். ஆனால் விஜய் அவர்களை பார்த்து புன்னகை செய்ததோடு நகர்ந்துவிட்டார்.

Also read: அஜித்தின் சென்டிமென்ட்டுக்கு ஆப்பு வைத்த வாரிசு.. துணிவுக்கு ஷாக் கொடுத்த விஜய்

இது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அந்த விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா வராததும் சில விவாதங்களுக்கு வழிவகுத்தது. இதற்கு முன்பே விஜய் இயக்குனர் அட்லி மனைவியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போதும் மனைவி இல்லாமல் தனியாகத்தான் அவர் வந்திருந்தார். இதையெல்லாம் சேர்த்து விஜய் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் பல வருடங்களாக அவர்கள் தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்தது.

அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது. வாரிசு விழா நடைபெற்ற மறுநாளில் இருந்தே இந்த சர்ச்சை தான் மீடியாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கூறினாலும் விஜய்யின் மனைவி எதற்காக இப்படி ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு சென்றார் என்ற கேள்விகளும் எழுந்தது.

Also read: வாரிசு சக்சஸ் ரேட்டை இப்பவே உறுதி செய்த சென்சார் போர்டு.. கதிகலங்கிய வம்சி

தற்போது அத்தனை கேள்விகளுக்குமான விடை கிடைத்திருக்கிறது. அதாவது விஜய்யின் மனைவி சங்கீதா கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்று இருக்கிறார். எப்போதும் கணவர் குழந்தைகளுடன் பண்டிகை தினங்களை கொண்டாடி வரும் சங்கீதா இந்த வருடம் தன் அப்பாவின் அழைப்பை ஏற்று அங்கு சென்று இருக்கிறார்.

மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் தான் அவர் தனியாக சென்றதாகவும், ஆடியோ பங்ஷன் முடிந்த மறுநாளே விஜய்யும் தன் மனைவியை பார்க்க சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த உண்மை எல்லாம் தெரியாமல் மீடியாக்கள் கடந்த சில நாட்களாகவே கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள். அந்த வகையில் இப்போது இந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

Also read: அடுத்த பட வாய்ப்பிற்காக வாரிசு படத்தை போட்டு காமித்த தில் ராஜு.. ரிலீசுக்கு முன்பே வெளிவந்த விமர்சனம்

Trending News