தனுஷ் சாதாரண நடிகராக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. தற்போது ஹாலிவுட் வரை சென்றதால் தான் தனுஷ் வளர்ச்சிக்கு யார் முக்கியமானவர்கள் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் அடிபடுகிறது. அதிலும் பெரும்பாலான ஓட்டுகள் செல்வராகவனை விட வெற்றிமாறனுக்கு அதிகமாக விழுந்து வருகிறதாம்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் ஆரம்பத்தில் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தவர் தான் தனுஷ். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு நடிகராக மாற்றிக் கொண்டார். தனுஷ் ஒரு நல்ல நடிகராக மாறியதற்கு காரணம் செல்வராகவன் தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் வசூல் மன்னனாக உயர்த்தி விட்டாரா என்ற இடத்தில்தான் செல்வராகவன் கொஞ்சம் அடி வாங்குகிறார். தனுசை ஒரு நல்ல நடிகராக மாற்றினாரே தவிர வசூல் நாயகனாக உயர்த்தவில்லை. வசூல் நாயகனாக தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஒரு இடத்தை வாங்கிக் கொடுத்தவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வசூல் சாதனை நிகழ்த்தியது.
ஆனால் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதா என்றால் கேள்விக்குறிதான். இந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக தனுஷ் வலம் வருவதற்கு வெற்றிமாறன் தான் காரணம் என கூறுகின்றனர்.
இதனால் செல்வராகவனுக்கு கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டுள்ளதாம். ஏற்றிவிட்ட ஏணியை மறந்து விட்டார்களா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இதன் காரணமாகவே தற்போது தன்னுடைய தம்பி தனுஷுடன் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்2, புதுப்பேட்டை2 என தொடர்ந்து மூன்று படங்களை இயக்க உள்ளாராம்.
இந்த மூன்று படங்களையும் வசூல் ரீதியாக வெற்றி பெறச் செய்வேன் என உறுதிமொழி எடுத்துள்ளார் செல்வராகவன். செல்வராகவனுக்கு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களை விழுங்கும் திமிங்கலம் என்ற பட்ட பெயரும் உள்ளது. காரணம் செல்வராகவன் படத்தை எடுத்து காணாமல் போன தயாரிப்பாளர்கள் பலர் உள்ளனர். தனுஷ் வெற்றிக்கு செல்வராகவன் காரணமா? அல்லது வெற்றிமாறன் காரணமா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.