ஊர் உலகத்தில் யார் தான் கதையை திருடி படம் எடுக்கவில்லை. ஆனால் அட்லீ பண்ணினால் மட்டும்தான் அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் எப்படி ஒரு கதையை திருடி எடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாததுதான்.
இதுவரை அட்லீ இயக்கிய அனைத்து படங்களுமே பழைய தமிழ் படங்களை காப்பி பண்ணி எடுத்ததுதான். அங்குதான் மாட்டினார் அட்லீ. எல்லோரும் பார்த்து சலித்து போன, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய கதைகளையும் காட்சிகளையும் வைத்தால் மாட்டிக்கொள்ள தானே செய்வார்.
ஆனால் மற்ற இயக்குனர்கள் அப்படியல்ல. அவர்கள் பெரும்பாலும் காப்பியடிப்பது கொரியன் படங்களை தான். ஏனென்றால் கொரியன் முகங்களை பலருக்கும் பிடிக்காது. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரியன் படங்களை பார்க்கும் ரசிகர்கள் மிக மிக குறைவு.
இதே ஹாலிவுட்டை காப்பி அடித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் நம்ம ஆட்கள். ஏனென்றால் ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி விடும். அப்படி இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் வழக்கமாக ஹாலிவுட் படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள்.
தமிழ் சினிமாவில் இந்த இயக்குனர் தான் சொந்த கதையில் படம் எடுக்கிறார் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் மணிரத்தினம் முதல் சங்கர் வரை அனைவருமே பல்வேறு படங்களில் சிலபல கதைகளையும் காட்சிகளையும் ஆட்டையை போட்டு எடுப்பவர்கள் தான்.
ஆனால் எல்லோரையும் போல திறமையாக அட்லீக்கு காப்பியடிக்க வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே மாட்டி சிக்கி தவிக்கிறார். இனியாவது தன்னுடைய முன்னோர்களின் அறிவுரையை கேட்டு எப்படி ஒரு கதையும் காட்சியும் திருடி யாருக்கும் தெரியாமல் தமிழ் சினிமாவில் புகுத்த வேண்டும் என்பதை அட்லீ தெரிந்து கொண்டால் மட்டுமே அவரது வண்டி ஓடும்.