திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலிவுட் சினிமா பக்கமே வரக்கூடாது.. முட்டை வீசி விரட்டப்பட்ட கமலஹாசன்

சினிமாவில் இவர் என்று சொல்வதைவிட சினிமாவே இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு சிறுவயதில் இருந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கமலஹாசன்.

சினிமாவில் கமல்ஹாசனுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய புதிய டெக்னாலஜிகளை தமிழில் அறிமுகப்படுத்துவதும் கமலஹாசன்.

எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவுக்கு வந்தால் கமலஹாசன் மட்டும் சம்பாதித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் புதிய புதிய டெக்னாலஜிகள் மற்றும் புதிய புதிய கதைகளை வைத்து படம் எடுப்பதில் நிறைய செலவு செய்து வருகிறார். அவர் நினைத்திருந்தால் இன்று ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்திருக்கலாம்.

ஆனால் சினிமா தான் என் மூச்சு என்பதற்காக சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே தொலைத்து விட்டார் என்பதுதான் உண்மை. கமலஹாசனுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் சினிமாவிலும் அவருக்கு ஒரு பெரிய இடம் காத்திருந்தது.

தமிழில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பாலிவுட் படங்களிலும் கமல்ஹாசன் பயன்படுத்தப்பட்டார். அப்போது படத்திற்கு படம் கமல்ஹாசனின் மார்க்கெட்டாக உயர்வதைக் கவனித்த முன்னணி நடிகர்கள் சிலர் கமலஹாசனின் பாலிவுட் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக செயல்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கமல்ஹாசன் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை அவமதிப்பதும், முட்டை வீசி கேவலப்படுத்துவதும் என தரக்குறைவான வேலைகளை செய்துள்ளனர். இதனால் வருத்தமடைந்த கமல்ஹாசன், தமிழ் சினிமாவே தனக்கு போதும் என திரும்ப வந்து விட்டதாக சினிமாவைச் சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

kamal-hassan-cinemapettai
kamal-hassan-cinemapettai

Trending News