தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக வலம் வந்த மைக் மோகன் பல வெற்றி படங்களை கொடுத்த ஹீரோவாக இருந்தாலும் சமீப காலமாக எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருப்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
ரஜினி கமல் என்ற ஆளுமைகள் இருந்தாலும் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு மாபெரும் பல வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படங்களை கொடுத்துள்ளார் மைக் மோகன். மோகன் படங்களில் பாடல்கள் எப்போதுமே சிறப்பாக அமையும்.
இதுவே அவரது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விடும். மேலும் அன்றைய காலத்தில் நடிகர் மோகனை பார்த்து ஏங்காத இளம் ரசிகைகளே கிடையாதாம். இவ்வளவு ஏன் ஒரு நடிகை மோகன் மீதுள்ள காதலால் அவரது மார்க்கெட்டுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அவர் மீது கேவலமான பலி ஒன்றை சுமத்தினார் என்பதும்கூட தெரிந்த விஷயம்தான்.
ஹீரோவாக அது மைக் மோகனின் மார்க்கெட்டை பாதித்தாலும் குணச்சித்திர நடிகராக நடிக்க வேண்டும் என மோகன் முடிவு செய்திருந்தால் இந்நேரம் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்திருப்பாராம். அந்த அளவுக்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒரு படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக நடிக்க கூட வாய்ப்பு வந்தது. ஆனால் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிப்பது தான் மோகனுக்கு மார்க்கெட் இல்லாமல் போக காரணம் என்கிறார்கள். மோகன் கடைசியாக 2008 ஆம் ஆண்டு சுட்ட பழம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு முன்பாக 1999 ஆம் ஆண்டு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
ஒருவேளை ரஜினி, கமல் போல் மோகனுக்கு இந்த காலகட்டத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்திருந்தால் முன்னணி நடிகராக வலம் வந்திருப்பாரோ, என்னவோ. 64 வயதில் ஹீரோவாக நடிக்க வேண்டுமா என்று கேட்டால் 70 வயதில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இல்லையா என எதிர் கேள்வி கேட்கிறாராம். நியாயம்தானே!